பஞ்சாபி நடிகையின் வயிற்றில் குத்திய மம்முட்டி..!

Bookmark and Share

பஞ்சாபி நடிகையின் வயிற்றில் குத்திய மம்முட்டி..!

மம்முட்டியாவது, நடிகையின் வயிற்றில் குத்துவதாவது.. அப்படி குத்தினாலும் படத்தில் மம்முட்டி பாக்ஸராக நடித்திருப்பார் அதனால் இன்னொரு பாக்ஸராக நடிக்கும் நடிகையின் வயிற்றில் குத்தியிருப்பார் என விதவிதமாக மம்முட்டியை நியாயப்படுத்தி நீங்கள் யூகிக்கும் காரணங்கள் எதுவுமே இதற்கு பொருந்தாது.

காரணம் இது தமாஷான ஒரு விஷயம் தான். மம்முட்டி தற்போது மார்த்தாண்டன் என்பவர் டைரக்சனில் அச்சா தின் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் அவருக்கு ஜோடியாக் நடிப்பவர் பஞ்சாபி நடிகை மான்சி சர்மா. ஜார்கண்டில் இருந்து கேரளாவுக்கு வந்து பல வருடங்களுக்கு முன்னரே செட்டிலான கேரக்டர் மம்முட்டியுடையது.

அவரது மனைவியாக நடிக்கும் மான்சி சர்மா, படத்தில் பெரும்பாலான காட்சிகளில் கர்ப்பிணியாகவே நடித்துள்ளார். இந்த கர்ப்பிணி வேஷத்தில் மம்முட்டி அவரை சைக்கிளில் முன்னால் அமரவைத்துக்கொண்டு சாலையில் ஓட்டிவருவது போல காட்சிகள் எல்லாம் சமீபத்தில் எர்ணாகுளம் டவுனில் எடுக்கப்பட்டன.

மான்சி கர்ப்பிணியாக நடித்த காட்சிகள் படமானபோது, படப்பிடிப்பு இடைவேளை நேரத்தில், அவரது வயிற்றில் பொய் கர்ப்பமாக மறைத்து வைக்கப்பட்ட தலையணையை, மம்முட்டி அவ்வப்போது செல்லமாக குத்தி, மான்சியை கிண்டல் செய்வாராம்.  

அதைவிட பியூட்டி என்னவென்றால், மான்சிக்கு பல நாட்களாக கர்ப்பிணியாகவே நடித்ததால், தான் ஒரு கர்ப்பிணி என்கிற எண்ணமே படப்பிடிப்பு முடிந்தும் கொஞ்ச நாள் வரைக்கும் இருந்ததாம்.


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions