முன்னாள் மேக்கப்மேனை தயாரிப்பாளராக்கிய மம்முட்டி...!

Bookmark and Share

முன்னாள் மேக்கப்மேனை தயாரிப்பாளராக்கிய மம்முட்டி...!

மம்முட்டி நடித்த ‘தெய்வத்திண்டே ஸ்வந்தம் க்ளீட்டஸ்’ என்கிற படத்தை பார்த்திருக்கிறீர்களா..? ஊரையே மிரட்டும் ரவுடி ஒருவன், ஏசுவாக வேடம் போட்டு நடித்ததும் ஆளே மாறிப்போவதுதான் கதை.. இந்தப்படத்தை இயக்கிய மார்த்தாண்டன் தான் இப்போது மீண்டும் மம்முட்டியை வைத்து ‘அச்சா தின்’ என்கிற படத்தையும் இயக்குகிறார்.

இந்தப்படத்தை தயாரிப்பது மம்முட்டியிடம் கொஞ்ச வருடங்களுக்கு முன்புவரை மேக்கப் மேனாக வேலைபார்த்த ஜார்ஜ் என்பவர்தான். தமிழில் பிரபல தயாரிப்பாளராக விளங்கும் ஏ.எம்.ரத்னம் கூட ஒரு காலத்தில் மேக்கப் மேனாக இருந்தவர் தான்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இந்தப்படத்தில் மம்முட்டி ஜார்கண்ட் பூர்வீகமாக கொண்டவராக நடிக்கிறார். பூர்வீகம் ஜார்கண்ட் தான் என்றாலும் இருபது வருடங்களாக கேரளாவில் செட்டில் ஆனவராக அவரது கேரக்டர் வித்தியாசமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறதாம்.

அதற்கேற்ற மாதிரி அவருக்கு ஜோடியாக வட இந்தியாவை சேர்ந்த மான்சி சர்மா என்பவர் நடிக்கிறார். இந்த மான்சி முன்பு ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பான ‘மகாபாரதம்’ தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தவராம்.

 


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions