தீயணைப்பு வீரர்களுடன் கலந்துரையாடிய மம்முட்டி..!

Bookmark and Share

தீயணைப்பு வீரர்களுடன் கலந்துரையாடிய மம்முட்டி..!

பலவிதமான கவர்மென்ட் அதிகாரி வேடங்களில் நடித்துவிட்ட மம்முட்டிக்கு, இத்தனை நாள் வாழ்க்கையில் தான் நடிக்காமல் விட்டுவிட்டோம் என்கிற மனக்குறையை தந்தது தீயணைப்பு அதிகாரி கதாபாத்திரம் தான். அதனால் தான் இயக்குனர் தீபு கருணாகரன் 'பயர்மேன்' படத்தின் கதையை சொன்னவுடன் அடுத்த நிமிடமே அக்ரிமெண்ட்டில் கையெழுத்திட்டார்.

படம் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கே ரிலீஸாவதாக இருந்து, சில நாட்கள் இழுபறிக்குபின் வரும் பிப்-19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் சமீபத்தில் எர்ணாகுளத்தின் அருகில் உள்ள திக்கரக்கராவில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு திடீரென மம்முட்டி சர்ப்ரைஸ் விசிட் அடித்தார்.. மம்முட்டி பயர்மேனாக நடிப்பதாக போஸ்டர் பார்த்து, தங்களுக்குள் அவ்வப்போது அதுகுறித்து வியப்பாக பேசிக்கொண்டிருந்த தீயணைப்பு அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் மம்முட்டியின் வருகை இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

அவர்களிடம் தீயணைப்பு துறையில் ஒவொருவரும் எதிர்கொண்ட சவால்களை கேட்டறிந்த மம்முட்டி, இந்தப்படத்தில் நடிக்கும்போதுதான் தீ விபத்து ஏற்படும்போது தீயணைப்பு வீரர்கள் படும் சிரமங்களையும் ரிஸ்க்கையும் மிக நெருக்கத்தில் தான் உணர்ந்ததாகவும் அவர்களது பணி குறித்து மனதார பாராட்டினார்.

அதுமட்டுமல்ல, இனிவரும் காலங்களில் அப்படிப்பட்ட விபத்துகளில் பாதிக்கப்படும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதாகவும் கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது 'பயர்மேன்' படத்தின் தயாரிப்பாளர் மிலன் ஜலீலும் உடனிருந்தார்.


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions