கேரளாவில் இன்று வெளியானது மம்முட்டி படம் மட்டும் தான்..!

Bookmark and Share

கேரளாவில் இன்று வெளியானது மம்முட்டி படம் மட்டும் தான்..!

முன்பெல்லாம் சித்திரை விஷு கொண்டாட்டமாக (வருடப்பிறப்பு) கேரளாவில் ஸ்டார் ஹீரோக்களின் படங்கள் வெளியாவதற்கு வரிசைகட்டி நிற்கும். அதற்கேற்ற மாதிரி அனைத்து முன்னணி நடிகர்களும் தங்களது படம் அன்றைய தினம் வெளியாவதை ஒரு கௌரவமாகவே கருதினார்கள்.

ஆனால் இன்றோ நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இன்று மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்கிற ஒரு படம் மட்டுமே வெளியாகியுள்ளது..

கேரளாவில் ஸ்டார் படங்கள் வெளியாகும் அதே நாளில் சென்னையிலும் வெளியாவதுதான் வழக்கமாக நடக்கும். ஆனால் மம்முட்டி படம் இரண்டு நாள் கழித்து (ஏப்-17) தான் சென்னைக்கே வருகிறது..

காரணம் இங்கே தமிழ்நாட்டில் கட்டாயமாக பின்பற்றப்படும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் நடைமுறை தான். கேரளாவில் அந்த கணக்கெல்லாம் இல்லை. அதனால் தான் போன வாரம் கூட எந்தப்படமும் வெளியாகவில்லை..

அதற்கு முதல் வாரம் கூட வெள்ளிக்கிழமை அல்லாது சனியன்றுதான் (ஏப்-4) திலீப் நடித்த 'இவன் மரியாதராமன்' படம் வெளியானது. அதுவும் ஓடிக்கழித்து 12 நாள் ஆகிவிட்டதால், இந்தவாரம் மம்முட்டி மட்டும் தான் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரப்போகிறார்.


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions