பாதைமாறிய தனது பயணத்தை துபாயில் முடித்தார் மம்முட்டி..!

Bookmark and Share

பாதைமாறிய தனது பயணத்தை துபாயில் முடித்தார் மம்முட்டி..!

மூன்று வருடங்களுக்கு முன்பு தேசியவிருது, சர்வதேச திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை அள்ளிய 'ஆதாமிண்டே மகன் அபு' படத்தை தெரியும் தானே.. தான் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருதை கைப்பற்றிய இந்தப்படத்தின் இயக்குனர் சலீம் அஹமது, அடுத்ததாக மம்முட்டியை வைத்து 'குஞ்சானந்தண்டே கடை' என்கிற படத்தை இயக்கினார்.

படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதனால் அவரது அடுத்த படத்திலும் தானே நடிப்பதாக மம்முட்டியே கால்ஷீட் கொடுத்துவிட, இப்படித்தான் இவர்களது கூட்டணியில் 'பாதேமாறி' என்கிற படம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப்படத்தில் மம்முட்டியின் மனைவியாக, ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் பங்குபெற்ற நடனக்கலைஞரான ஜுவல் மேரி என்பவர் நடித்துள்ளார். 'போராட்டத்தின் பயணம்' என்கிற டேக்லைனுடன் உருவாகியுள்ள இந்தப்படம் கேரளா, மும்பை மற்றும் துபாய் என மூன்று இடங்களில் மூன்று காலகட்டத்தில் பயணிக்கும் கதையாக படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துபாயில் முடிவடைந்தது.

 


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions