மம்முட்டியின் பூர்வீகம் ஜார்கண்ட் மாநிலமா..?

Bookmark and Share

மம்முட்டியின் பூர்வீகம் ஜார்கண்ட் மாநிலமா..?

மம்முட்டியின் டார்கெட் வருடத்திற்கு ஆறு படமாவது நடித்துவிட வேண்டும். குறைந்த பட்சம் ஐந்து படங்களையாவது ரிலீஸ் பண்ணிவிடவேண்டும். இந்த வருட ஆரம்பத்தில் பயர்மேன் என்கிற ஹிட் படத்தை கொடுத்த மம்முட்டிக்கு, வரும் சித்திரை விசு தினத்தன்று 'பாஸ்கர் தி ராஸ்கல்' படம் வெளியாகிறது.

தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் என்றால் சலீம் அகமது இயக்கும் பாதேமாறி மற்றும் மார்த்தாண்டன் இயக்கும் 'அச்சா தின்' என்கிற படங்கள் தான்.  

ஏற்கனவே மம்முட்டி நடித்த 'தெய்வத்திண்டே ஸ்வந்தம் க்ளீட்டஸ்' என்கிற படத்தை இயக்கிய மார்த்தாண்டன் தான் 'அச்சா தின்' படத்தையும் இயக்குகிறார்.

இந்தப்படத்தில் மம்முட்டி ஜார்க்கண்டை பூர்வீகமாக கொண்டவராக நடிக்கிறார். பூர்வீகம் ஜார்கண்ட் தான் என்றாலும் இருபது வருடங்களாக கேரளாவில் செட்டில் ஆனவராக அவரது கேரக்டர் வித்தியாசமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் முன்னாள் மலையாள ஹீரோ ரதீஷின் மகனான பத்மராஜூம் சினிமாவிற்குள் நுழைகிறார்.


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions