சம்பளத்தை உயர்த்துகிறார் மம்முட்டி..!

Bookmark and Share

சம்பளத்தை உயர்த்துகிறார் மம்முட்டி..!

சூப்பர்ஸ்டார் ஹீரோக்கள் எப்போதுமே தங்களுக்கான சம்பளத்தை  பிக்ஸ் பண்ணி வைத்திருக்க மாட்டார்கள். படத்திற்கு படம் பட்ஜெட் ஏறும்போதும், முந்தைய பட கலெக்சனை பொறுத்தும் சம்பளத்தை மாற்றுவார்கள்.

ஆனால் பல வருடங்களாக கிட்டத்தட்ட ஒரே அளவு சம்பளத்தை வாங்கி வந்த மம்முட்டி, சமீபத்தில் வெளியாகி தற்போது 50வது நாளை கடந்து ஓடிக்கொண்டு இருக்கும் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் வெற்றியை தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திவிட்ட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதுநாள் வரை என்ன சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார்கள் என நினைக்கிறீர்கள்.. ஜஸ்ட் மூணரை கோடி ரூபாய் மட்டும் தான்.. உண்மை தான். இதில் என்ன சோகம் என்றால் முப்பது வருடங்களாக கேரளாவில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் மம்முட்டியை, விட மூன்று வருடத்திற்கு முன் தமிழில் நடிகரான சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளம் அவரைவிட இரண்டு கோடி அதிகம்..  

ஆனால் மலையாள சினிமாவின் வியாபார எல்லை குறுகியது என்பதால் மம்முட்டிக்கு வழங்கப்படும் சம்பளமே அங்கு அதிகபட்சம் என்கிறார்கள்.. என்ன.. இதிலிருந்து இன்னும் 50 லட்சம் உயர்த்தி, நாலு கோடி கேட்பதற்கு வாய்ப்பு இருக்கிறது அவ்வளவுதான்.. கேரளா சூப்பர்ஸ்டார்கள் இருவரும் வருடத்திற்கு ஐந்து படங்களுக்கு குறையாமல் நடிப்பதன் அர்த்தம் இப்போது புரிகிறதா..?


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions