பழங்குடி இன பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கிய மம்முட்டி..!

Bookmark and Share

பழங்குடி இன பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கிய மம்முட்டி..!

பிரபல மலையாள இயக்குனர் கமல் இயக்கத்தில் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் நடிக்கிறார் மெகாஸ்டார் மம்முட்டி. இந்தப்படத்திற்கு 'உடோப்பியாயிலே ராஜாவு' என பெயர் வைத்துள்ளார்கள்.

இந்தப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிப்பவர் ஜுவல் மேரி.. கேரள சேனல் ஒன்றில் சின்னத்திரை தொகுப்பாளராக, ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் பங்குபெற்ற நடனக்கலைஞராக வலம் வந்த இவர் தான் மம்முட்டி தற்போது நடித்துவரும் 'பாதமாறி' படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் 'உடோப்பியாயிலே ராஜாவு' படத்தின் துவக்க விழா பூஜை கொச்சியில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மம்முட்டி எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெள்ளை வேட்டி சட்டையில் சிம்பிளாக வந்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வசதியற்ற பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்களுக்கு  உதவும் விதமாக, பலருக்கு தனது சொந்தப்பணத்தில் இருந்து தையல் மிஷின்களை வழங்கினார் மம்முட்டி.

இந்த நிகழ்வின்போது சமீபத்தில் திருமணமான கமலின் மகன் ஜென்யூஸ் முகமுதுவும் அவரது புது மனைவி ஷல்பாவும் கலந்துகொண்டனர்.

 


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions