துருப்பிடித்துக் கிடக்கும் இந்தியாவின் முதல் மாருதி 800-ஐ விலைக்கு வாங்கும் மம்முட்டி

Bookmark and Share

துருப்பிடித்துக் கிடக்கும் இந்தியாவின் முதல் மாருதி 800-ஐ விலைக்கு வாங்கும் மம்முட்டி

பிரதமர் இந்திரா காந்தியின் கையால் கிடைத்த அரிய பொக்கிஷமான இந்தியாவின் முதல் மாருதி 800, துருப்பிடித்து தெருவோரம் கிடக்கும் அவலம். தற்போது அந்த காரை பிரபல மலையாள நடிகர் மம்முட்டி வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஒரு சின்ன ப்ளாஷ்பேக்:

1983-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி இந்திய விமான சேவையில் பணியாற்றிய ராஜீவ் காந்தி மேடையில் வீற்றிருக்க, ஹர்பல் சிங் மேடைக்கு அழைக்கப்படுகிறார். அவருக்கு பாரத பிரதமர் இந்திரா காந்தி மாருதி 800 காருக்கான சாவியை வழங்குகிறார்.அதுதான் இந்தியாவின் முதல் மாருதி 800.

டெல்லியில் வசித்து வந்த ஹர்பல் சிங்குக்கு லக்கி டிரா மூலமாக அந்த கார் (பரிசுப்போட்டி) கிடைத்தது. ஹர்பல் சிங் இந்திய விமான சேவையில் பணிபுரிந்து வந்தாலும், சொந்தமாக கார் வாங்கும் அளவிற்கு வசதி இல்லாத அவரது குடும்பத்தினர், இந்த காரை கடவுள் தந்த பரிசாகவே பார்த்தனர். தனது குடும்பத்தில் ஒருவரைப் போலவே அந்த காரை கவனித்துக் கொண்டனர்.

2010-ம் ஆண்டு சிங்கும், சில வருடங்களில் அவரது மனைவியும் அடுத்தடுத்து உயிரிழக்க அந்த கார் கேட்பாரின்றி தெருவோரம் நிறுத்தப்பட்டது. அந்த காரை பராமரிக்க முடியாத சிங்கின் குடும்பத்தினர், அது மெல்ல மெல்ல துருப்பிடித்து அழிந்து கொண்டிருப்பதைக் கண்டு வேதனை கொண்டனர். அருங்காட்சியகத்தில் பொக்கிஷமாக வைத்து பாதுகாக்கப்பட வேண்டிய இந்தக் காரை, மாருதி நிறுவனம் எடுத்துக் கொண்டால் போதும். அதற்கு எந்த பணமும் தர தேவையில்லை என்பதே அவர்களின் வேண்டுகோளாக இருந்து வந்தது.

இந்நிலையில், ஊடகங்களில் தேசிய பொக்கிஷமான இந்த காரைப் பற்றி செய்தி வெளியான பிறகு மம்முட்டி அந்த காரை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விலையுயர்ந்த மிரியாத் மற்றும் லாவிஷ் கார்களை தனது கார் கேரேஜில் வைத்திருக்கும் மம்முட்டி, முதன் முதலில் வாங்கிய காரே மாருதி 800 தான். அதனால் இந்தியாவின் முதல் மாருதி 800 கேட்பாரற்று தெருவோரம் துருப்பிடித்துக் கிடப்பதை அறிந்து அதை வாங்க முடிவு செய்துள்ளார்.
இதனால், காரை மாருதி சுசுகி நிறுவனத்திடமே கொடுக்கும் முடிவை சிங்கின் குடும்பத்தினர் கை விட்டுள்ளனர். 


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions