“ஆட்டை எங்கேப்பா காணோம்?” - கலாட்டா பண்ணிய மம்முட்டி..!

Bookmark and Share

“ஆட்டை எங்கேப்பா காணோம்?” - கலாட்டா பண்ணிய மம்முட்டி..!

நாய்களை வைத்துதான் படம் எடுக்கமுடியுமா..? நம்ம ஊர் 'ஆட்டுக்கார அலமேலு' மாதிரி 'ஆட்டை வைத்து படம் எடுக்க முடியாதா?.. முடியும் என ஆட்டை வைத்து மலையாளத்தில் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள்  ஜெயசூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தின் பெயர் என்ன தெரியுமா.?' ஆடு ஒரு பீகர ஜீவியானு'.. அதாவது 'ஆடு ஒரு பயங்கர மிருகம்' என்று அர்த்தமாம்..ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல், ஒரு ஆடு, அதுவும் சொன்னபடி கேட்டு நடக்கிற சண்டித்தனம் பண்ணாத பெண் ஆடு ஒன்று இந்தப்படத்தில் நடித்திருக்கிறது.. காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில், ஆட்டுக்கு கிட்டத்தட்ட கதாநாயகிக்கு இணையான வேடமாம்.

வரும் பிப்-6ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் மெகாஸ்டார் மம்முட்டி கலந்துகொண்டார்.. அப்போது ’எங்கேப்பா டைட்டில் ரோலில் நடித்திருக்கும் அந்த ஜீவன்?” என விழாவில் அந்த ஆட்டை காணோமே என கேட்டு ஜாலியாக கலாட்டா செய்தார்.. அனைவரும் கலந்துகொண்ட அந்த விழாவில் அந்த ஆடு மட்டும் கலந்துகொள்ளவில்லை.. இதே தமிழில் உருவான ’நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் அந்தப்படத்தின் பிரஸ்மீட் நடந்தபோது அந்தப்படத்தில் நடித்த நாய்க்கும் ஒரு நாற்காலி போட்டு அமரவைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions