துல்கர் சல்மான் போஸ்டரை பார்த்து சிரித்த மம்முட்டி!

Bookmark and Share

துல்கர் சல்மான் போஸ்டரை பார்த்து சிரித்த மம்முட்டி!

மம்முட்டி தற்போது மார்த்தாண்டன் என்பவர் இயக்கத்தில் அச்சா தின் என்கிற படத்தில் நடித்து வருகிறார். காமெடி, குடும்பக்கதை என்று சொல்லப்பட்டாலும் பின்னணியில் மெல்லிய ஆக்சன் இழையோடுவது ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. இந்தப்படத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 20 வருடங்களுக்கு முன்பே கேரளாவில் வந்து செட்டில் ஆனவராக நடிக்கிறார் மம்முட்டி. அவருக்கு ஜோடியாக மான்சி சர்மா நடிக்கிறார். 

இந்தப்படத்தின் பாடல் காட்சி ஒன்றில் மம்முட்டி தனது மனைவியான மான்சி சர்மாவை சைக்கிளில் முன்பக்கம் அமரவைத்து எர்ணாகுளம் சாலைகளில் ஓட்டி வருவார். அப்போது ரோட்டின் ஒரு ஓரத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்திருக்கும் கேரள போலீஸ் என்கிற படத்தின் (படமும் டைட்டிலும் கற்பனை தான்) போஸ்டரில் துல்கரை போலீஸார் துரத்துவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த போஸ்டரின் கீழ நின்று டான்ஸ் ஆடும் மூன்று பேர், அந்த வழியாக சைக்கிளில் வரும் மம்முட்டியை நிறுத்தி அந்த போஸ்டரை காட்டுவார்கள். அதை பார்த்து மம்முட்டியும் மான்சியும் சிரிப்பதாக அந்த பாடல் காட்சி நீள்கிறது. 

இதேபோலத்தான் முன்னறிவிப்பு என்கிற படத்தில் மம்முட்டி தங்கியிருக்கும் லாட்ஜின் ரூம்பாயான் சின்னபையன் ஒருவன் துல்கர் சல்மான் பற்றி சொல்ல, துல்கரா யார் அது என கேட்பார் பல வருடம் ஜெயிலில் இருந்துவிட்டு அப்போதுதான் ரிலீஸாகி வந்திருக்கும் மம்முட்டி. தந்தை மகன் சம்பந்தப்பட்ட இந்தகாட்சி கேரள ரசிகர்களிடம் பலத்த கைதட்டலை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!
துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ
நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மலையாள கதாசிரியர்! பாலியல் குற்ற வழக்கில் என்ன சொன்னார் தெரியுமா?
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் ரஜினி மகள்!
துல்கர் பட உரிமையை வாங்கிய தனுஷ்!
“புதியவர்களின் வரவால் எனக்கு பாதிப்பில்லை” - பிருத்விராஜ்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions