குஞ்சாக்கோ போபன் படத்தை பாராட்டிய மம்முட்டி..!

Bookmark and Share

குஞ்சாக்கோ போபன் படத்தை பாராட்டிய மம்முட்டி..!

சமீபத்தில் குஞ்சாக்கோ போபன் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் 'சிறகொடிஞ்ச கினாவுகள்'. மலையாள சினிமாக்களில் தவறாமல் இடம்பெறும் வழக்கமான 'கிளிஷே' க்களை படம் முழுவதும் கிண்டலடித்து காட்சிகளை அமைத்திருந்தார் இயக்குனர் சந்தோஷ் விஸ்வநாதன்.

இந்தப்படத்தை பார்த்த மம்முட்டி இதனை சாதாரண படம் என ஒதுக்கிவிடமுடியாது என பாராட்டியுள்ளார்.  இதுநாள் வரை மக்களை முட்டாளாக்கும் காட்சிகளை தவறாது பயன்படுத்திவந்த சினிமாக்களை இந்தப்படம் தைரியமாக கிண்டலடித்துள்ளது என்று கூறியுள்ள மம்முட்டி, தனது படங்களில் கூட அவ்வப்போது இதுபோன்ற  கிளிஷேக்கள் இடம்பெறுவதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

குறிப்பாக இந்தப்படத்தை மம்முட்டி பாராட்டியுள்ளதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இருபது வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மம்முட்டி, பானுப்ரியா நடித்து ஹிட்டான 'அழகிய ராவணன்' படத்தின் கதையின் ஒரு பகுதியை மட்டும் டெவலப் பண்ணித்தான் தற்போது இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சீனிவாசன் நடித்து, அதில் இடம்பெற்ற கேரக்டரான அம்புஜாட்சன் என்கிற கதாசிரியர், அந்தப்படத்தில் சொன்ன 'சிறகொடிஞ்ச கினாவுகள்' கதையைத்தான் இப்போது விரிவான படமாகவே எடுத்துள்ளார்கள். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions