மோகன்லாலுக்கு சிபாரிசு செய்த மம்மூட்டி!

Bookmark and Share

மோகன்லாலுக்கு சிபாரிசு செய்த மம்மூட்டி!

மலையாள சினிமா நடிகர்களுக்கிடையே நல்லதொரு சகோதரத்துவம் இருந்து வருகிறது. அதாவது மோகன்லாலை யாராவது தவறாக கூறினால் மம்மூட்டி தாங்கிக்கொள்ள மாட்டார். அதேபோல் மம்மூட்டியைப் பற்றி யாராவது குறைத்து மதிப்பிட்டு பேசினால், வரிந்து கட்டிக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களிடம் எகிறி விடுவார் மோகன்லால்.

மேலும், ஒருவர் நடித்த படத்தை இன்னொருவர் பார்த்து விட்டு நிறைகுறைகளை பகிர்ந்து கொள்ளும் மனபக்குவம் அவர்களிடம் இருந்து வருகிறது. அதேபோல் டைக்டர்கள் சொல்லும் ஒரு கதையில் தன்னை விட மோகன்லால் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றினால், அந்த கதையில் நடிக்குமாறு மோகன்லாலை கேட்டுக்கொள்வார் மம்மூட்டி.

அப்படித்தான் த்ரிஷ்யம் படத்தில் நடிக்க ஜீத்து ஜோசப் தன்னை சந்தித்து கதை சொன்னபோது, இதேபோன்று ஒரு கதையில் தற்போது நான் நடித்துக்கொண்டிருக்கிறேன். மேலும், இந்த கதை என்னைவிட மோகன்லாலுக்கு சரியாக இருக்கும் என்று அவரிடம் அனுப்பினாராம்.

அப்படித்தான் த்ரிஷ்யம் படத்தில் நடித்தாராம் மோகன்லால். அதோடு த்ரிஷ்யத்துக்கு முன்புவரை வரிசையாக ப்ளாப் கொடுத்து வந்த மோகன்லாலுக்கு எதிர்பாராதவிதமாக த்ரிஷ்யம் 100 நாட்களை கடந்து ஓடி மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.

ஆனால் அப்படி ஓடிய அந்த படத்தில் நடிக்க மோகன்லால் வாங்கிய சம்பளமோ ஒரு கோடிதானாம். த்ரிஷ்யம் ஹிட்டுக்கு பிறகுதான் அவரது சம்பளம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions