இந்த வருடத்தில் மோகன்லாலும் மம்முட்டியும் இணைந்து நடிப்பது உறுதி..!

Bookmark and Share

இந்த வருடத்தில் மோகன்லாலும் மம்முட்டியும் இணைந்து நடிப்பது உறுதி..!

மலையாள மெகாஸ்டார் மம்முட்டியும், சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் தாங்கள் நடிக்க வந்த காலத்திலேயே ஒன்றாக இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். பின் வளர்ந்து டாப் ரேங்கில் அமர்ந்த பின்னரும் கூட எப்போதாவது ஒருமுறை, வாய்ப்பு கிடைக்கும்போது சேர்ந்து நடிக்க தவறுவது இல்ல.

அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் மறுப்பதும் இல்லை. கடந்த 2013ல் மம்முட்டி ஹீரோவாக நடித்து வெளியான 'கடல் கடன்னு ஒரு மாத்துக்குட்டி' படத்தில்  மோகன்லால், கெஸ்ட் ரோலில் நடிகர் மோகன்லாலாகவே நடித்திருந்தார்.

ஆனால் இந்தப்படத்தைவிட 2008ல் வெளியான 'ட்வெண்ட்டி-20' படம் தான் இவர்கள் இருவரையும் சம அளவில் வேலைவாங்கியது.  ஜோஷி இயக்கிய இந்தப்படத்தில் சுரேஷ்கோபியும் மூன்றாவது மூர்த்தியாக நடித்திருந்தார்.

மலையாள திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் இந்தப்படத்தில் நடித்திருந்தனர். தற்போது மீண்டும் மம்முட்டியையும் மோகன்லாலையும் இணைத்து ஒரு படத்தை உருவாக்குவதற்கான வேலைகள் ஒருபக்கம் நடந்து வருகின்றன.

இதற்கான பிள்ளையார் சுழி கடந்த வருடமே போடப்பட்டு விட்டது. படத்தை இயக்கப்போவது தமிழ் ரசிகர்களுக்கெல்லாம் நன்கு பரிச்சயமான  பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் தான்.

கதாசிரியராக இருந்து, இயக்குனராக மாறி, இப்போது முழுநேர நடிகராக மாறிவிட்ட ரெஞ்சி பணிக்கரும் இயக்குனர் ரஞ்சித்தும் தான் இந்தப்படத்திற்கான கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள்.

ரஞ்சித் இப்போது மோகன்லாலின் படத்தை இயக்கவுள்ளார் என்பதும் ரெஞ்சி பணிக்கர் ஷாஜி கைலாஸின் பல வெற்றிப்படங்களுக்கு கதை எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனேகமாக இந்த ஐவர் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions