தடுமாறி நின்றார் நயன்தாரா..! தோளில் தூக்கினார் மம்முட்டி..!

Bookmark and Share

தடுமாறி நின்றார் நயன்தாரா..! தோளில் தூக்கினார் மம்முட்டி..!

சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்துள்ள 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

படம் வரும் சித்திரை விஷு கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது. படத்தில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் மம்முட்டிக்கும் நயன்தாராவுக்குமான மாண்டேஜ் காட்சிகள் இன்றைய இளம் நடிகர்களின் காதல் காட்சிகளுக்கு சவால் விடும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன.

தனது இரண்டு குழந்தைகளுடன் நயன்தாராவையும் அழைத்துக்கொண்டு பிக்னிக் போகிறார் மம்முட்டி.. குழந்தைகள் இரண்டும் அவருடையதுதானா என்பதுதான் படத்தின் மைய முடிச்சு. கூடவே நயன்தாராவும் போகிறார்.

அந்த பிக்னிக்கின்போது தங்களது தோட்டத்தை சுற்றிப்பார்க்க அவர்களை அழைத்துச்செல்கிறார் மம்முட்டி. அப்போது சிறிய வாய்க்கால் குறுக்கிட குழந்தைகள் இருவரும் அதை எளிதாக தாண்டிவிடுகின்றனர்.

மம்முட்டியும் எளிதாக கிராஸ் பண்ண, நயன்தாராவோ தண்ணீரில் இறங்க பயந்துகொண்டு தடுமாறி நிற்கிறார். திரும்பிப்பார்த்த மம்முட்டி நயன்தாராவுக்கு தண்ணீரில் இறங்க கைகொடுக்கிறார்.

ஆனால் கையை பிடிக்கும்போது நயன்தாரா தடுமாறி அப்படியே கீழே விழப்போக, மம்முட்டி படக்கென்று குனிந்து அவரை தன் தோளில் தாங்குகிறார். அப்படியே அவரை தோளில் சுமந்தபடியே கரையில் கொண்டுவந்து இறக்கிவிட, நயன்தராவுக்கோ வெட்கத்தை அடக்கமுடியாமல் முகம் சிவக்கிறது.  

இன்னும் இதுபோன்ற பல அழகிய காட்சிகளை மம்முட்டி, நயன்தாராவை வைத்து சிறைபிடித்துள்ளார் இயக்குனர் சித்திக்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions