
மலையாள திரையுலகில் மம்முட்டி சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்துவந்த காலகட்டத்தில் டாப் ரேங்கில் இருந்த நடிகர் தான் ரதீஷ்.. சாம்பல் நிற கண்கள் தான் இவரது ஸ்பெஷாலிட்டி.. மம்முட்டி வளர்ந்து வந்த காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து இருபது படங்களுக்கு மேல் நடித்துள்ளனர்.
தமிழில் கூட 'சேலம் விஷ்ணு', சிவாஜி நடித்த 'ஞானப்பறவை' ஆகிய படங்களில் நடித்துள்ளார் ரதீஷ். 1975ல் இருந்து கதாநாயகனாக நடித்துவந்த ரதீஷ், பின்னர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்த ரதீஷ், தனது 48 வயதிலேயே காலமானார். அவருக்கு இரண்டு மகள், இரண்டு மகன் உடபட நான்கு குழந்தைகள். அதில் தற்போதுதான் அவரது மூத்த மகள் பார்வதி ரதீஷ், இப்போதுதான் கதாநாயகியாக அறிமுகமாகி குஞ்சாக்கோ போபன் ஜோடியாக 'மதுர நாரங்கா' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
அவரை தொடர்ந்து ரதீஷின் மகனான பத்மராஜூம் சினிமாவிற்குள் நுழைகிறார். கதாநாயகனாக நடிக்கும் அளவுக்கு அவருக்கு முகவெட்டு இல்லையென்றாலும் மம்முட்டி நடிக்கும் 'அச்சா தின்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
ஏற்கனவே மம்முட்டி நடித்த 'தெய்வத்திண்டே ஸ்வந்தம் க்ளீட்டஸ்' என்கிற படத்தை இயக்கிய மார்த்தாண்டன் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார்.
Post your comment
Related News | |
![]() |