ரகுமானுக்கு நம்பிக்கை தந்த மம்முட்டி!

Bookmark and Share

ரகுமானுக்கு நம்பிக்கை தந்த மம்முட்டி!

மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் ஓர் அறிமுக இயக்குனராக 2005ல் மம்முட்டியை வைத்து இயக்கிய ராஜமாணிக்கம் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் மற்ற அந்த சமயத்தில் முன்னணி நடிகர்களையும், ஏன் இயக்குனர்களையும் கூட வாய்பிளக்க வைத்தது.  இன்றும் கூட விஷேச தினங்களில் ஒரு குறிப்பிட்ட சேனல் மட்டும் நம்ம ஊரில் பாட்ஷாவை களம் இறக்குவது மாதிரி அங்கே ராஜமாணிக்கம் படத்தை தான் ஒன்மேன் ஆர்மியாக களம் இறக்கிவருகிறது. இந்த சூப்பர்ஹிட் படத்தில் ஹீரோவான மம்முட்டிக்கு வலதுகையாக முக்கியமான ரோலில் நடித்து அப்ளாஸ் அள்ளினார் ரகுமான்.

ஆனால் இந்த கேரக்டரில் நடிக்க ரகுமான் முதலில் ஒப்புக்கொள்ளவில்லையாம். அதன் பின்னணியும் சுவராஸ்யமானது. 1987லிலேயே நடிக்க வந்த நடிகர் ரகுமான், மலையாளத்திலும் தமிழிலும் மாறிமாறி கதாநாயகனாக நடித்துவந்தார். கிட்டத்தட்ட பத்து வருட ஓட்டத்திற்குப்பின் தொண்ணூறுகளின் இறுதிவரை கதாநாயகனாக தாக்குப்பிடித்தவருக்கு, அடுத்து குணச்சித்திர நடிகராக மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில் தான் எந்த முடிவெடுக்கலாம் என்கிற குழப்பமும் ரகுமானுக்கு ஏற்பட்டது.

இதனால் நான்கு வருடங்கள் எந்தப்படத்திலும் ரகுமான் நடிக்காமல் இருந்த சமயத்தில்தான் ராஜமாணிக்கம் படத்தில் வாய்ப்பு தேடிவந்தது. ஆனால் அதை ஏற்க முதலில் மறுத்துவிட்டார். இந்த தகவல் மம்முட்டியின் காதுக்கு போக, அவர் ரகுமானை அழைத்துப்பேசி, இந்த கேரக்டர்தான் உனக்கு ரீ என்ட்ரி தரப்போகிறது என நம்பிக்கை தந்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக படத்தில் தனக்கான சண்டைக்காட்சிகளையும் கூட ரகுமானுக்கு விட்டுத்தந்தார்.

அந்தப்படத்தின் ஹிட்டுக்கு பிறகுதான் ரஹ்மானின் இரண்டாவது இன்னிங்க்ஸ் வெற்றிகரமாக துவங்கி, இதோ இப்போது 36 வயதினிலே படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாராட்டுக்களையும் தட்டிச்சென்றுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions