“இத பாரு.. நல்லா பாரு” - ரஜினியை மிரட்டிய மம்முட்டி..!

Bookmark and Share

“இத பாரு.. நல்லா பாரு” - ரஜினியை மிரட்டிய மம்முட்டி..!

பழைய நினைவுகளை அசைபோடுவது, அதுவும் இரண்டு சூப்பர்ஸ்டார் பற்றிய விஷயங்கள் என்றால் அது சுவராஸ்யம் தானே.. மலையாள மெகாஸ்டார் மம்முட்டி தமிழில் நுழைந்தது வேண்டுமானால், மலையாளத்தில் இருந்து டப்பிங் ஆகிய 'ஒரு சி.பி.ஐ டைரிக்குறிப்பு', 'ஆகஸ்ட்-1'  படங்களின் மூலமாக இருக்கலாம்.

ஆனால் தமிழ் ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிந்தது மணிரத்னம் டைரக்சனில் சூப்பர்ஸ்டார் ரஜினிடன் அவர் இணைந்து நடித்த 'தளபதி' படத்தின் மூலமாகத்தான். ரஜினியையும் மம்முட்டியையும் படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் நெருங்கிய நண்பர்களாக மாற்றிய படம்.

அந்த சுவையான நிகழ்வுகள் பற்றி சமீபத்தில் ரஜினியே மனம் திறந்திருக்கிறார். மம்முட்டி நடித்த 'நியூடெல்லி' படத்தில் அவரது நடிப்பை பார்த்து அவரது ரசிகனாகவே மாறிப்போனாராம் ரஜினி.

அதுமட்டுமல்ல மம்முட்டியின் பெர்ஷனாலிட்டி, பழக்கவழக்கங்கள் இவற்றால் ஈர்க்கப்பட்ட ரஜினி, தளபதி படத்தின் கதையை மணிரத்னம் சொல்லி, அதில் மம்முட்டி நடிக்கிறார் என சொன்னபோது, அவரைத்தவிர 'தேவா' கேரக்டரை வேறு யாராலும் சிறப்பாக செய்துவிடமுடியாது என்று அதை மகிழ்ச்சியுடன் ஆமோதித்தார்.. அதற்கு முன்பு வரை ஏதாவது விழாக்களில் மட்டுமே மம்முட்டியை சந்தித்துள்ளார் ரஜினி.

'தளபதி' படத்தில் இருவரும் இணைந்து நடித்த அந்த 43 நாட்களிலும் மம்முட்டியை பற்றிய இனிமையான பல நினைவுகளை மனதில் தேக்கி வைத்திருக்கிறார் ரஜினி. குறிப்பாக, தோள்பட்டையில் இருக்கும் துண்டை விலக்கி, உள்ளே காயத்திற்கு போடப்பட்ட கட்டை காட்டி, “இத பாரு.. நல்லா பாரு” என சொல்லும் காட்சியில் மம்முட்டியின் நடிப்பைக்கண்டு ஒரு கணம் ஸ்தம்பித்து போனாராம் ரஜினி.

இதுபோல இன்னும் படப்பிடிப்பின்போது நிகழ்ந்த பல நிகழ்வுகளை மனதில் வைத்துள்ள ரஜினி, தனது மனைவி லதா கூட மம்முட்டியின் தீவிர ரசிகை என்று சொல்லி அவரை இன்னும் கௌரவப்படுத்தியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions