மம்முட்டியை இயக்குனர் சித்திக் எப்போதும் சீரியஸாகவே காட்டுவது ஏன்..?

Bookmark and Share

மம்முட்டியை இயக்குனர் சித்திக் எப்போதும் சீரியஸாகவே காட்டுவது ஏன்..?

இயக்குனர் சித்திக்கின் படங்கள் நூறு சதவீதம் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தருபவை.. அப்படிப்பட்ட சித்திக்குடன் தான் மெகாஸ்டார் மம்முட்டியும் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் கைகோர்த்திருக்கிறார்கள் 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்கிற படத்திற்காக.. ஏற்கனவே மம்முட்டியை வைத்து சித்திக் இயக்கிய, 'ஹிட்லர்', 'குரோனிக்கல் பேச்சிலர்' படங்களின் காமெடி தர்பார்  நாடறிந்த விஷயம்.

ஆனால் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா..?  இந்த இரண்டு படங்களில் காமெடி தான் ஹைலைட் என்றாலும் இரண்டிலுமே மம்முட்டி சீரியசாகத்தான் நடித்திருந்தார். கொஞ்சம் கூட சிரிக்கவே மாட்டார்.

ஆனால் ரசிகர்களை விலா நோக சிரிக்க வைத்திருப்பார். இந்த படங்களை  பார்க்காதவர்கள், தமிழில் இவற்றின் ரீமேக்குகளாக வெளியான 'மிலிட்டரி' மற்றும் 'எங்கள் அண்ணா' படங்களில் சத்யராஜ், விஜயகாந்த் நடித்த கேரக்டர்களை நினைவுக்கு கொண்டுவந்து பாருங்கள்.

இப்போது தெரிகிறதா..? அந்த வகையில் இப்போது நடித்துள்ள இந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் மம்முட்டிக்கு சீரியஸ் வேடம் தானாம். தனது குடும்பத்தாரிடமும் சுற்றியுள்ளவர்களிடமும் முன்பு ஏற்பட்ட அனுபவங்களால் அனைவரிடமும் ரப் அண்ட் டப்பாகவே நடந்து கொள்கிறார்.

அதனால் தான் அவரது கேரக்டரை பிரதிபலிக்கும் விதமாக 'பாஸ்கர் தி ராஸ்கல்' என படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் சுயநல மனிதர்களையே சந்தித்து வெறுப்பில் இருக்கும் கோடீஸ்வரரான மம்முட்டியின் வாழ்க்கையில் அவருக்கு பாசிட்டிவ் எனர்ஜி ஊட்டுபவராக நுழைகிறாராம் நயன்தாரா. ஆனால் படமோ நூறு சதவீதம் காமெடி விருந்து படைக்கும் என்கிறார்கள். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions