மம்முட்டியின் முக்கியமான படம் !

Bookmark and Share

மம்முட்டியின் முக்கியமான படம் !

பரதன், ஜோஷி போன்றவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர் கே.சசீந்தரா, அவர் மலையாளத்தில் வைடூர்யம் என்கிற படத்தை இயக்கினார். இப்போது அவர் தமிழில் தகவல் என்றொரு படத்தை இயக்கியுள்ளார்.இதன் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்பப் பணிகள் நடந்து வருகின்றன.

அடுத்து சசீந்தரா மம்முட்டியை வைத்து மலையாளத்தில் படம் இயக்கவுள்ளார். இதில் மம்முட்டிக்கு வித்தியாசமான வேடமாம். அந்த கதாபாத்திரத்துக்கு மூக்கு வளர்ந்து பெரிதாகிக் கொண்டே போகிற உடல் பிரச்னை உள்ளது.

அதன் விளைவுகள் பற்றிப் படம் பேசுகிறது. இக்கதையில் காமெடியும் உண்டு சீரியஸான பகுதியும் உண்டு. படக் கதையைக் கேட்டுவிட்டு இதற்குத் தயாராக நிறைய நேரம் பிடிக்கும் சரியான திட்ட மிடலுடன் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம் மம்முட்டி. இதற்கு உடல் ரீதியாகவும் கொஞ்சம் தயாராக வேண்டுமென்று கால அவகாசம் கேட்டுள்ளாராம்.

மம்முட்டி கதையை மட்டுமே பார்ப்பவர். அப்படிப் பார்த்து மட்டுமே திறமைசாலிகளை ஊக்குவிப்பவர். அவர் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
மலையாள நடிகர் சங்க பொது செயலாளராக மம்முட்டி தேர்வு
மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் மம்முட்டி படம்
மோகன்லாலுடன் இணைந்து நடிக்க மம்முட்டி தயங்குவது ஏன்..?
மம்முட்டியின் காதலியாக நடிப்பவர் திருநங்கையா..?
மம்மூட்டி பட பாடல் வாட்ஸ் அப்பில் வெளியீடு
மம்முட்டி குடும்பத்திலிருந்து இன்னொரு நடிகர்
ஆண்ட்ரியாவுக்கு மலையாளத்திலும் ஆபர்!
மோகன்லால், மம்முட்டி மீது குற்றம் சாட்டும் இயக்குனர்
அப்பா - மகனை இயக்க லிங்குசாமி திட்டம்....?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions