மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் மம்முட்டி படம்

Bookmark and Share

மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் மம்முட்டி படம்

கொலை குற்றத்துக்காக தண்டனை காலம் முடிந்த பின்பும் 20 வருடங்களாக சிறையில் இருக்கிறார் மம்முட்டி. சிறை அதிகாரி நெடுமுடி வேணுவின் சுயசரிதையை எழுதவரும் பெண் எழுத்தாளருக்கு மம்முட்டியின் கதையும், அவர் எழுதிய சில பக்கங்களும் பிடித்துப் போகிறது.

அவரை சிறையிலிருந்து விடுவித்து தனியாக ஒரு இடத்துக்கு அழைத்து வந்து, மம்முட்டியின் சுயசரிதையை எழுதச் சொல்கிறார்.சிறையோ சிறைக்கு வெளியோ... எங்கிருந்தாலும் தன்போக்கில் இருப்பவர் மம்முட்டி.

அவரை எழுதும்படி அவரது போக்கிற்கு விரோதமாக வற்புறுத்தும் போது என்ன நிகழும்? மம்முட்டி உண்மையிலேயே கொலைகாரர்தானா?  வெறும் த்ரில்லராக இல்லாமல் கொஞ்சம் மனோதத்துவரீதியாகவும் எடுக்கப்பட்ட, மம்முட்டி நடித்த முன்னறியுப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

இப்படம் ஜுன் 19 முதல் 26 வரை நடக்கும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. அதேபோல் தான்சானியாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
மம்முட்டியின் முக்கியமான படம் !
மலையாள நடிகர் சங்க பொது செயலாளராக மம்முட்டி தேர்வு
மோகன்லாலுடன் இணைந்து நடிக்க மம்முட்டி தயங்குவது ஏன்..?
மம்முட்டியின் காதலியாக நடிப்பவர் திருநங்கையா..?
மம்மூட்டி பட பாடல் வாட்ஸ் அப்பில் வெளியீடு
மம்முட்டி குடும்பத்திலிருந்து இன்னொரு நடிகர்
ஆண்ட்ரியாவுக்கு மலையாளத்திலும் ஆபர்!
மோகன்லால், மம்முட்டி மீது குற்றம் சாட்டும் இயக்குனர்
அப்பா - மகனை இயக்க லிங்குசாமி திட்டம்....?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions