மோகன்லாலுடன் இணைந்து நடிக்க மம்முட்டி தயங்குவது ஏன்..?

Bookmark and Share

மோகன்லாலுடன் இணைந்து நடிக்க மம்முட்டி தயங்குவது ஏன்..?

இப்படி ஆசைகாட்டி மோசம் செய்வதே இந்த ஸ்டார் ஹீரோக்களுக்கு வேலையாக போய்விட்டது. மம்முட்டி, மோகன்லால் இருவரும் 56வது முறையாக இணைந்து நடிக்கப்போகிறார்கள் என்கிற செய்தியை சில நாட்களுக்கு முன் பரப்பினார்கள்.

ஆனால் இப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டது என குண்டை தூக்கி போடுகிறார்கள். இணைந்து நடிக்க மோகன்லால் தயார் தான்.. ஆனால் மம்முட்டிதான் தயக்கம் காட்டுகிறார் என்கிறார்கள்.. தற்போதைக்கு பெரிய பட்ஜெட்டில் அதுவும் மல்டி ஸ்டாரர் படங்களில் நடிக்க மம்முட்டிக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லையாம்.

காரணம் கடந்த வருடம் இறுதி வரை சரிந்து கிடந்த தனது மார்க்கெட்டை தற்போது தான் சோலோவாகவே நிமிர்த்தி தொடர் வெற்றிகளை கொடுத்து சரிக்கட்டி வருகிறார். இதே பாணியை இன்னும் சில வருடங்களுக்கு தொடர்ந்தால் தான் தனது மார்க்கெட் ஸ்டெடியாக இருக்கும் என நினைக்கிறார் மம்முட்டி.

அதனால் மோகன்லால்-மம்முட்டி இணைந்து நடிக்கும் 56வது படம் வெறும் கனவாகவே ஆகிவிடுமோ என கவலைப்படுகிறார்கள் இருவரது ரசிகர்களும்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions