மம்முட்டியின் காதலியாக நடிப்பவர் திருநங்கையா..?

Bookmark and Share

மம்முட்டியின் காதலியாக நடிப்பவர் திருநங்கையா..?

'தங்க மீன்கள்' ராம் இயக்கத்தில் தமிழில் மம்முட்டி நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றுதான் சில தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. 2௦1௦ல் நடித்த 'வந்தே மாதரம்' படத்தை தொடர்ந்து ஐந்து வருடம் கழித்து மீண்டும் தமிழில் நேரடியாக நடிக்க இருக்கிறார் மம்முட்டி என்பது சந்தோஷமான விஷயம்தான்...

மம்முட்டியின் ரீ என்ட்ரிக்கேற்ற கதையாக இது இருக்குமாம். குறிப்பாக இந்த கதையில் ராம் செய்துள்ள ஒரு புதுமைக்காகத்தான் மம்முட்டி இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மம்முட்டி தனது இமேஜை எல்லாம் தூர தூக்கிப்போட்டுவிட்டு நடிக்கும்படியான கேரக்டராம். அதாவது விலைமாதுவாக தொழில் செய்யும் ஒரு திருநங்கைக்கும், அவர் மேல் மம்முட்டிக்கும் உருவாகும் காதலைப்பற்றிய கதை இது என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தின் கதாநாயகிகளாக ஆண்ட்ரியாவும் அஞ்சலியும் நடிக்க இருக்கிறார்கள் என சொல்லப்பட்டு வந்த நிலையில் ஆண்ட்ரியா நடிக்கவில்லை என்றாலும் அஞ்சலி நடிப்பது உறுதி என்றும் சொல்லப்படுகிறது. அந்த திருநங்கை கேரக்டர் யார் என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளதாம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions