நோயால் அவதிப்படும் முன்னாள் இயக்குனருக்கு மம்முட்டி உதவி..!

Bookmark and Share

நோயால் அவதிப்படும் முன்னாள் இயக்குனருக்கு மம்முட்டி உதவி..!

மறைந்த கவர்ச்சிக்கனி சில்க் நடித்த படங்களை தவறாது பார்த்து வந்தவர்களுக்கு அவர் நடித்த  மிஸ் பமீலா படம் பற்றி தெரியாமல் இருக்காது. எண்பதுகளில் பரபரப்பை ஏற்படுத்திய அந்தப்படத்தின் இயக்குனர் தவலக்கர செல்லப்பன்.

ஆனால் இவர் இயக்குனராக அறிமுகமாகியதோ மம்முட்டி ஹீரோவாக நடித்த  ஆளொருங்கி அரங்கொருங்கி படத்தில் தான். தொடர்ந்து தனது அடுத்த படத்தையும் மம்முட்டியை வைத்தே இயக்கினார். ஆனாலும் இவரது திரையுலக பயணம் 1992க்கு மேல் தொடரவில்லை.

தற்போது இவர் வறுமையில் வாடுவதுடன் பல விதமான் உடல் உபாதைகளுக்கும் ஆளாகி சிரமப்பட்டுவருகிறார். இவருக்கு திரைப்பட அகாடமியில் இருந்து ஆயிரம் ரூபாயும், இயக்குனர்கள் சங்கத்தில் இருந்து இரண்டாயிரம் ரூபாயும் மட்டுமே தற்போது பென்சனாக வந்துகொண்டிருக்கிறது.

அரசாங்கமும் இவரது டயாலிஸிற்காக கொஞ்சம் உதவி செய்துவருகிறது. இவருடைய விருப்பம் என்னவென்றால், சிகிச்சைக்காக தான் மருத்துவமனைக்கு சென்று வருவதற்கு ஒரு பழைய கார் இருந்தால் வசதியாக இருக்கும் என்பதுதான். இதுகுறித்து கேள்விப்பட்ட மம்முட்டி, அவருக்கு தேவையான உதவிகளை செய்துள்ளாராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions