மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ மம்முட்டி..?

Bookmark and Share

மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ மம்முட்டி..?

1991ல் தளபதி படத்தில் மலையாள சூப்பர் ஸ்டாராகிய மம்முட்டியை நடிக்கவைத்து அவருக்கு தமிழ்சினிமாவில் ஒரு நிலையான இடத்தை அமைத்து கொடுத்தவர் மணிரத்னம்.

தளபதி படம், ரஜினிக்கு மட்டுமல்ல மம்முட்டியையும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவருக்கும் தமிழில் ஒரு புதிய வாசலை திறந்துவிட்டது. அதற்கடுத்ததாக இருவர் படத்தில் மம்முட்டியை நடிக்க அழைத்தபோது அந்தக்கதையில் தான் நடித்தால் சரியாக வராது என மம்முட்டி ஒதுங்கிக்கொள்ள, அதன் பின்னர் தான் மோகன்லாலை வைத்து அதப்படத்தை இயக்கினார் மணிரத்னம்.

இதை இப்போது ஞாபகப்படுத்துவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 25 வருடங்கள் கழித்து மீண்டும் மணிரத்னமும், மம்முட்டியும் இணைய இருக்கிறார்களாம். மணிரத்னத்தின் புதிய பட நாயகன் மம்முட்டி தானம்.

அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருக்கிறாராம். மகனை இயக்கி முடித்து ஹிட் கொடுத்த சூட்டோடு, அடுத்து தந்தையை இயக்க தயாராகி வருகிறாராம் மணிரத்னம்.

இளைஞர்கள் பலர் அவர் படத்தில் நடிக்க தவம் கிடக்க, அவரோ மம்முட்டியை தேடி போவதை ஆச்சார்யமாக சொல்லுகிறார்கள் பலரும். ஆனால் கதைக்கான ஹீரோவை மட்டும் தேடும் மணிரத்னத்தை அறிந்தவர்களுக்கு இதில் பெரிய ஆச்சர்யம் என்ன இருந்துவிடப்போகிறது..?


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions