மம்தா குல்கர்னி தலைமறைவு குற்றவாளியாக கோர்ட்டு அறிவிப்பு

Bookmark and Share

மம்தா குல்கர்னி தலைமறைவு குற்றவாளியாக கோர்ட்டு அறிவிப்பு

மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் உள்ள அவ்யான் லைப் சயின்ஸ் என்ற நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தானே குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ‘எபெட்ரின்’ என்ற போதைப்பொருள் சிக்கியது.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிர்வாகிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.இந்த போதைப்பொருள் வழக்கில் சர்வதேச போதைப்பொருள் மன்னன் விக்கி கோஸ்வாமி மற்றும் அவரது மனைவியும், இந்தி நடிகையுமான மம்தா குல்கர்னி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதுபற்றி அறிந்ததும் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் விக்கி கோஸ்வாமி கென்யாவில் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே கணவன், மனைவி இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து தானே செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது.இந்த நிலையில், இந்த போதைப்பொருள் வழக்கில் நடிகை மம்தா குல்கர்னியை தானே கோர்ட்டு தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. 


Post your comment





Related News
பிரபல நாயகிக்கு பிடிவாரண்ட்- ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை மம்தா குல்கர்னி கணவருடன் போதை பொருள் பதுக்கல்!
கலிபோர்னியாவில் காற்று வாங்கும் மம்தா மோகன்தாஸ்..!
கேன்சரிலிருந்து மீண்டும் மீண்டு வந்த மம்தா மோகன் தாஸ் - கைநீட்டி ஏற்றுக்கொண்ட மல்லுவுட்!
கேன்சர் சிகிச்சைக்காக மம்தா மீண்டும் ஓய்வு
நடிகை மம்தாமோகன்தாஸ் விவாகரத்து.
பாலிவுட் நடிகை மம்தா - சர்வதேச கடத்தல் மன்னனை மணந்தார்!
புற்று நோயில் இருந்து மீண்டும் மீண்டு வருவேன் - நடிகை மம்தா நம்பிக்கை!
2 குழந்தைகளுக்கு அம்மாவாகும் இளம் நடிகை !
எனக்கு விரைவில் திருமணம்: நடிகை பரபரப்பு.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions