கேன்சரிலிருந்து மீண்டும் மீண்டு வந்த மம்தா மோகன் தாஸ் - கைநீட்டி ஏற்றுக்கொண்ட மல்லுவுட்!

Bookmark and Share

கேன்சரிலிருந்து மீண்டும் மீண்டு வந்த மம்தா மோகன் தாஸ் - கைநீட்டி ஏற்றுக்கொண்ட மல்லுவுட்!

இரண்டாவது முறையாக கேன்சரால் பாதிக்கப்பட்ட நடிகை மம்தா மோகன்தாஸ் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். ஏற்கனவே ஒருமுறை புற்று நோயால் பாதிக்கப்பட்டார் மம்தா மோகன்தாஸ். இதையடுத்து நடிப்பதை நிறுத்தி விட்டு தீவிர சிகிச்சை பெற்றுக் கொண்டார்.

இதன் பலனாக அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு புதுப் பொலிவு பெற்று திரும்பினார். கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட மம்தா மோகன்தாஸை மலையாள திரையுலகம் எப்போதும் கௌரவமாகவே நடத்தியிருக்கிறது.

அவர் முதல்முறை சிகிச்சை எடுத்துக் கொண்டு, நலமுடன் திரும்பிய போது வாய்ப்புகளை தாராளமாக வழங்கியது மலையாள சினிமா.சமீபத்தில் மீண்டும் கேன்சரின் பாதிப்பு மம்தாவிடம் தெரிய ஆரம்பித்தது.

மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொண்டார். தலைமுடி கொட்டிய நிலையில் குட்டை தலைமுடியுடன் படங்களில் நடித்தார். அதிலிருந்து மீண்டும் மீண்டு வந்துள்ளார் மம்தா மோகன் தாஸ்.மலையாளத்தின் பிரபல இயக்குனர் ஷஃபி இயக்கத்தில் திலீப் நடிக்கும் புதிய படத்திலும் மம்தா மோகன்தாஸ்தான் ஹீரோயின்.

இதற்கு முன் திலீபும், மம்தாவும் பாசஞ்சர், மை பாஸ் படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions