மன்சூரலிகான் படத்திற்கு பெப்சி தடை

Bookmark and Share

மன்சூரலிகான் படத்திற்கு பெப்சி தடை

மன்சூரலிகான் தற்போது அதிரடி என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இதனை பாலு ஆனந்த் என்பவர் இயக்குகிறார். மவ்மிதா சாட்டர்ஜி, புவிஷா, ஷகானா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது.

இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதியில் நடந்தபோது பெப்சி நிர்வாகிகள் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்தனர்.

அப்போது மன்சூரலிகான் பெப்சியில் இல்லாத வெளி ஆட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் படப்பிடிப்பை நிறுத்தி உள்ளனர். ஆத்திரமடைந்த மன்சூரலிகான் அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் சென்னையை அடுத்த திருமழியிசை பகுதியில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார். அதில் பணி செய்ய பெப்சி ஆட்கள் யாரும் செல்லவில்லை.

இதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு திரும்பினார். "பெப்சி நிர்வாகிகளை அவதூறாக திட்டிய மன்சூரலிகான் பகிரங்க மன்னிப்பு கடிதம் கொடுத்தால்தான் அவரது படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு கொடுப்போம்" என்று பெப்சி கூறிவிட்டது.

"நான் தயாரிப்பாளர், என் படத்தை திடீரென்று நிறுத்தியதால் எனக்கு பல லட்சம் நஷ்டம் அதை பெப்சி தருமா? நான் பணம் போட்டு படம் எடுக்கிறவன், நான் எதுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும், படப்பிடிப்பை நிறுத்தினால் சட்டபடிநடவடிக்கை எடுப்பேன்" என்கிறார் மன்சூரலிகான்.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions