மீண்டும் உருவாகிறது மணல் கயிறு

Bookmark and Share

மீண்டும் உருவாகிறது மணல் கயிறு

1982-ம் ஆண்டு விசு எழுதி, இயக்கிய சூப்பர் ஹிட் படம் ‘மணல் கயிறு’. இப்படத்தில் எஸ்.வி.சேகர், கிஷ்மூ, மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் விசுவுக்கென்று ஒரு தனி இடத்தை இந்த படம் பெற்றுக் கொடுத்தது. 

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போவதாக எஸ்.வி.சேகர் உறுதிபட கூறியுள்ளார். இந்த படத்தில் 1982-ல் வெளியான படத்தில் நடித்த விசு உள்ளிட்ட அனைவரும் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால், விசுவின் தம்பி கிஷ்மூ தற்போது உயிருடன் இல்லாததால் அவருடைய கதாபாத்திரத்தில் ஒரு முக்கியமான நடிகரை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடைபெறுகிறது. 

மணல் கயிறு படத்தில் எஸ்.வி.சேகர் போடும் எட்டு கண்டிஷன்கள் படத்தில் பிரபலம். தற்போது இரண்டாம் பாகத்தில் ஒரு பெண் அந்த எட்டு கண்டிஷன்களும் போடும்படி படமாக்கவிருக்கிறார்களாம்.

ஏனென்றால், தற்போதைய காலகட்டத்தில் ஆண்கள் யாருக்கும் கண்டிஷன் போடமுடியாது. பெண்கள்தான் அனைத்துக்கும் கண்டிஷன் போடுகிறார்கள் என்று விளக்கமும் கூறுகிறார் எஸ்.வி.சேகர்.


Post your comment





Related News
\'மணல்நகரம்\' படத்தின் துபாய் வில்லன் விகே.
துபாயில் இந்தியர் பாகிஸ்தானியர் ஒற்றுமை கண்டுவியந்தேன்! ​ \'மணல் நகரம்\' தயாரிப்பாளரின் அனுபவம்
உண்மைச் சம்பவத்தை படமாக்குவது கடினம்: சங்கர்
\'ஒருதலை ராகம்\' புகழ் சங்கர் இயக்கும் படத்தில் துபாய் பெண் ஹீரோயின்..!
பாடல் காட்சி நெருக்கத்தால். . மலையாள நடிகருடன் - ரம்யா நம்பீசன் காதல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions