மஞ்சு மனோஜின் திருமணத்திற்கு மோடி வாழ்த்து

Bookmark and Share

மஞ்சு மனோஜின் திருமணத்திற்கு மோடி வாழ்த்து

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும் டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகருமான மஞ்சு மனோஜுக்கும், ப்ரணதி ரெட்டிக்கும் மே 20 தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்திய பிரதமர் மோடி உட்பட பல அரசியல் பிரபலங்களுக்கும் திரை உலக பிரபலங்களுக்கும் இந்த திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாய்டு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்பட ஏழு மாநில ஆளுநர்களும் பல்வேறு அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர். தென்னிந்திய திரைப் பிரபலங்கள் பலரும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மஞ்சு குடும்பத்தாருடன் நெருங்கிய நட்பு கொண்ட இந்திய பிரதமர் மோடி அலுவலக பணிகள் காரணமாக திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் மோடி புதுமண தம்பதிகளை வாழ்த்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

நடிகர் மோகன் பாபு பெருமிதத்துடன் அக்கடிதத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் வாழ்த்துக் கடிதம் எழுதிய மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
சட்ட சிக்கலில் சிக்கிய பாரதிராஜாவின் மகன்- அடுத்தது என்ன நடக்கும்
பாகுபலியில்சி வகாமி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த லக்ஷ்மி மஞ்சு!
தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவரானா மஞ்சு லக்ஷ்மி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions