ஆன்மீக படத்தில் நடிக்கும் மஞ்சு விஷ்ணு

Bookmark and Share

ஆன்மீக படத்தில் நடிக்கும் மஞ்சு விஷ்ணு

டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் மஞ்சு விஷ்ணு,  தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த அரிமா நம்பி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது  நடித்து வருகின்றார். இப்படத்தை டைனமைட் என்ற பெயரில் இயக்குநர் தேவ கட்டா இயக்கி வருகின்றார்.நடிகை பிரணிதா  சுபாஸ் இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார்.

இப்படத்தை தொடர்ந்து மஞ்சு விஷ்ணு ஆன்மீக படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. சிவனின் மீது மாறாத அன்புகொண்ட அவரது பக்தர் கண்ணப்பாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இயக்குநர் தனிகேளா பரணி திட்டமிட்டுள்ளார்.

சிவ பக்தர் கண்ணப்பாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஏற்கனவே வெளிவந்த தெலுங்கு படத்தில் நடிகர் கிருஷ்ணமாராஜு நடித்திருந்தார்.தற்போது மீண்டும் தெலுங்கில் உருவாகும் இந்த ஆன்மீக படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து பின்னர் நாயகனாக மாறிய சுனில் கண்ணப்பாவா நடிப்பதாக கூறப்பட்டது. தீடீரென சுனில் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டு நடிகர் மஞ்சு விஷ்ணு இப்படத்தில் கண்ணாப்பாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுள்ளாராம்.

இப்படத்தை நடிகர் மஞ்சு விஷ்ணுவே தனது 24 பிரேம்ஸ் பேக்டரி பட நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions