காக்கா முட்டை மணிகண்டன் பெற்ற 3 விருதுகள்!

Bookmark and Share

காக்கா முட்டை மணிகண்டன் பெற்ற 3 விருதுகள்!

தனுஷ்-வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ள படம் காக்கா முட்டை. இந்த படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் மணிகண்டன் இயக்கியிருக்கிறார்.

கோலிசோடா பாணியில் சிறுவர்களின் பிரச்சினையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்தில் ரம்மி ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மா வேடத்தில் நடிக்க அவரது மகன்களான ரமேஷ், விக்னேஷ் என்ற சிறுவர்கள் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் தேசிய விருது பெற்றதை அடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், விதார்த் நப்பில் குற்றமும் தண்டனையும் என்ற படத்தை தற்போது இயக்கிக்கொண்டிருக்கிறார் மணிகண்டன்.

மேலும், இந்த மணிகண்டன் கே.வி.ஆனந்த், விஜய்மில்டன், வேல்ராஜ் ஆகியோரைப்போன்று ஒளிப்பதிவாளரும்கூட. அதனால் தனது படங்களுக்கு தானே ஒளிப்பதிவு செய்து கொண்டே இயக்கி வருகிறார்.

அந்த வகையில், இவர் முதலில் இயக்கிய மீண்டும் ஒரு புன்னகை என்ற குறும்படம் நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படத்திற்கான விருது பெற்றுள்ளது. அதையடுத்து, நாளைய இயக்குனர் படமொன்றிற்கு ஒளிப்பதிவு செய்து சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதினையும் பெற்றிருக்கிறார் மணிகண்டன்.

அந்த வகையில், ஏற்கனவே 2 விருதுகளை பெற்றிருந்த மணிகண்டனுக்கு, காக்கா முட்டை படம் அவருக்கு 3வது விருதினை பெற்றுக்கொடுத்திருக்கிறது.

 


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions