கார்த்தி - மணிரத்னம் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Bookmark and Share

கார்த்தி - மணிரத்னம் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஓகே கண்மணி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் தயாரிக்கவிருப்பதாக நேற்று ஒரு தகவல் வெளியானது. ஆனால் உண்மையில் இப்படத்தின் திரையரங்க உரிமையை மட்டுமே தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளதாம்.

படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளதாம். இப்படத்தில் நடிகர் கார்த்தி விமான பைலட்டாகவும் சாய் பல்லவி டாக்டராகவும் நடிக்கவுள்ளனர். செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்குகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions