30 வருடத்திற்கு பிறகு கன்னடத்தில் படம் இயக்கும் மணிரத்னம்!

Bookmark and Share

30 வருடத்திற்கு  பிறகு கன்னடத்தில் படம் இயக்கும் மணிரத்னம்!

இன்று ஒரு இயக்குநராக நாடே போற்றும் மணிரத்னம், முதன் முதலி இயக்குநராக அறிமுகமானது கன்னடத்தில்தான். படத்தின் பெயர் பல்லவி அனு பல்லவி.

அனில் கபூர் ஹீரோ. இசை இளையராஜா. இந்தப் படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியா முழுவதும் பல மொழிகளில் இயக்குநராக ஒரு வலம் வந்த பின், இப்போது மீண்டும் கன்னடத்தில் மணிரத்னம் ஒரு படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் பெங்களூரில் நடந்த 8வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற மணிரத்னத்திடம், மீண்டும் கன்னடப் படம் இயக்கும் திட்டம் உள்ளதா என்று கேட்டதற்கு, 'நிச்சயம் உள்ளது' என்றார்.

மேலும் கூறுகையில், "தயாரிப்பாளர் எஸ்வி ராஜேந்திரசிங் பாபு கன்னடத்தில் ஒரு படம் இயக்கித் தரக் கேட்டிருக்கிறார். நேரம் கூடி வரும்போது அந்தப் படத்தை இயக்குவேன்," என்றார்.


Post your comment





Related News
மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!
மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!
மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!
மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.!
20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா?
மெகா ஹிட் இயக்குனர் மணிரத்தினம் படத்தில் இந்த பிக் பாஸ் பிரபலமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions