மணிரத்னம் படத்தில் நயன்தாரா ?

Bookmark and Share

மணிரத்னம் படத்தில் நயன்தாரா ?

மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்திற்கு கோமாளி என பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன. அந்தப் படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் சொன்னார்கள்.

இப்போது அவர்களுடன் நயன்தாராவும் நட்சத்திரங்களின் பட்டியலில் இணைந்துள்ளாராம். நயன்தாரா இதுவரை மணிரத்னம் இயக்கத்தில் நடித்து இல்லை. இதற்கு முன்  ராவணன் படத்தில் கூட பிரியாமணி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவைக் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டார் என்றும் செய்திகள் வந்தன.

இப்போது மணிரத்னம் குழுவினர் நயன்தாராவைச் சந்தித்து கதையைச் சொன்னதாகவும் கதையைக் கேட்டவுடனே படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

இப்படி படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன், நயன்தாரா என முக்கியமான நட்சத்திரங்கள் நடிப்பதன் மூலம் படத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே மணிரத்னம் படம் என்றாலே இந்தியாவே திரும்பிப் பார்க்கும். அதோடு இந்த நட்சத்திரங்களும் படத்தில் நடிப்பதன் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் இந்தப் படம் மிகப் பெரிய வசூலை அள்ளவும் வாய்ப்பாக இருக்கும். மணிரத்னம் படத்தைப் பற்றி நாளுக்கு நாள் புதிய செய்திகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. அவராகவே அறிவிக்கும் வரை எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது என்பதும் உண்மை.


Post your comment





Related News
மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!
மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!
மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!
மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.!
20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா?
மெகா ஹிட் இயக்குனர் மணிரத்தினம் படத்தில் இந்த பிக் பாஸ் பிரபலமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions