துல்கர்சல்மான்-நித்யாமேனனுக்கு வாய்ப்பூட்டு போட்ட மணிரத்னம்!

Bookmark and Share

துல்கர்சல்மான்-நித்யாமேனனுக்கு வாய்ப்பூட்டு போட்ட மணிரத்னம்!

கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு பிறகு ஆயுத எழுத்து, குரு, ராவணன், கடல் நான்கு படங்களை இயக்கிய மணிரத்னத்துக்கு தொடர் தோல்விகளே கிடைத்தன.

அதனால் பலத்த அதிர்ச்சியில் இருக்கும் அவர், இந்த தொடர் தோல்விகளை துரத்தியடிக்க வேண்டும் என்கிற வெறியுடன் தற்போது ஓகே கண்மணி படத்தை இயக்கி வருகிறார்.

அதனால் வழக்கம்போல் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியான முறையில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வரும் அவர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி விட்டார்.

இதற்கிடையே போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் கோடை விடுமுறையில் ஓகே கண்மணி திரைக்கு வந்து விடும் என்கிறார்கள்.

மேலும், இந்த படத்தில் நடித்துள்ள துல்கர்சல்மான்- நித்யாமேனன் இருவருமே மணிரத்னம் படத்தில் நடித்து விட்ட பெருமிதத்தில் காணப்படுகிறார்கள். இதில் நித்யாமேனனிடத்தில், இந்த ஓகே கண்மணி எந்த மாதிரியான படம் என்று கேட்டால், தயவு செய்து அதைப்பற்றி மட்டும் கேட்காதீர்கள்.

படத்திலுள்ள ஒரு டயலாக்கைகூட அவுட் பண்ணக்கூடாது என்று டைரக்டர் எங்களுக்கு ஆரம்பத்திலேயே கண்டிசன் போட்டு விட்டார் என்கிறார். அதோடு, கதையைகூட அவர் முழுசுமாக கூறவில்லை.

முதலில் இந்த மாதிரியான கதை என்று ஒரு அவுட்லைனைதான் சொன்னார். மற்றபடி தினமும் ஸ்பாட்டில் அவர் காட்சிக்கேற்ப எந்த மாதிரியான ரியாக்சனை வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்கிறாரோ அதைதான் செய்திருக்கிறோம். அதனால் முழுக்கதை என்னவென்று இன்னும் எங்களுக்கே தெரியாது என்று சொல்லி எஸ்கேப் ஆகிறார் நித்யாமேனன்.


Post your comment





Related News
மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!
மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!
மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!
மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.!
20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா?
மெகா ஹிட் இயக்குனர் மணிரத்தினம் படத்தில் இந்த பிக் பாஸ் பிரபலமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions