படப்பிடிப்பு தளத்தில் ஓடிக்கொண்டேயிருக்கும் மணிரத்னம்!

Bookmark and Share

படப்பிடிப்பு தளத்தில் ஓடிக்கொண்டேயிருக்கும் மணிரத்னம்!

துல்கர்சல்மான்- நித்யாமேனனை வைத்து ஓ காதல் கண்மணி என்ற படத்தை இயக்கிய மணிரத்னம், அடுத்தபடியாக நாகார்ஜூனா, மகேஷ்பாபு, ஐஸ்வர்யாராயை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு மெகா படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த கூட்டணியை வைத்துதான் ஓ காதல் கண்மணியே படத்திற்கு முன்பு ஒரு படம் இயக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார் மணிரத்னம். ஆனால், மகேஷ்பாபுவின் கால்சீட் அப்போது கிடைக்காததால் அந்த முயற்சியை தள்ளி வைத்து விட்டு, துல்கர்சல்மானை வைத்து ஓ காதல் கண்மணி படத்தை இயக்கினார்மேலும், ஓ காதல் கண்மணியே குறுகிய கால படம் என்பதால், வேகவேகமாக அப்படத்தின் படப்பிடிப்பை முடித்தார் மணிரத்னம்.

அதோடு, சமீபகாலமாக அவர் படப்பிடிப்பு தளத்தில் அதிக வேகத்துடன் காணப்படுவதாகவும் அவருடன் ஒர்க் பண்ணிய கலைஞர்கள் சொல்கிறார்கள். அதாவது, முன்பெல்லாம் பெரும்பாலும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே நடிகர் நடிகைகளிடம் வேலை வாங்கி வந்த மணிரத்னம், இப்போது கடல் படத்திற்கு பிறகு அடியோடு மாறி விட்டாராம்.

அதாவது படப்பிடிப்பு தளத்தில் ஆப் பேண்ட்- டீசர்ட் போட்டுக்கொண்டு சின்ன பையனாட்டம் ஒவ்வொரு வேலைகளையும் ஓடி ஓடி செய்கிறாராம் மணிரத்னம். அவரது இந்த திடீர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் உதவி இயக்குனர்களெல்லாம் தடுமாறிக்கொண்டு கிடக்கிறார்களாம். 


Post your comment





Related News
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
இயக்குனர் மணிரத்னத்துக்கு தற்கொலை மிரட்டல் ! ஊழியரால் பரபரப்பு
மற்ற ஊர்களை விடுங்க, சென்னையை மிரட்டிய காற்று வெளியிடை வசூல்
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா?
அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்
மணிரத்னம் எப்போதும் என்னை கட்டாயப்படுத்த மாட்டார்: ஏ.ஆர்.ரகுமான்
மணிரத்னத்தை கௌதம் மேனன் சந்தித்தது ஏன் தெரியுமா?
பட பிரச்சனையால் மணிரத்னம் மீது கோபமாக இருக்கும் பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions