ஓ காதல் கண்மணியில், ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாடிய பாடல்

Bookmark and Share

ஓ காதல் கண்மணியில், ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாடிய பாடல்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ஓ காதல் கண்மணி படத்தை தனது இசையால் தேனிசை மழையாக மாற்றிவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். இப் படத்தில் ஒன்பது பாடல்கள் இடம்பெறுகின்றன.

இவற்றில் ஒரு பாடலை ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் பாடி இருக்கிறார்.  மௌலா வா சல்லிம் எனத் தொடங்கும் இதை பாடல் என்று சொல்ல முடியாது. குரானில் இடம்பெற்றுள்ள அரபி வாசகங்களுக்கு இசை வடிவம் கொடுத்து அதை தன் மகனையே பாட வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஓ காதல் கண்மணி படம் தெலுங்கில் ஓ பங்காரம் என்ற பெயரில் வெளியாக உள்ளது. ஓ பங்காரம் படத்திலும் மௌலா வா சல்லிம் பாடல் இடம்பெறுகிறது.  அதையும் ஏ.ஆர்.அமீன்தான் பாடி இருக்கிறார்.

ஓ காதல் கண்மணி படத்தில் கார ஆட்டக்காரா என்ற பாடலை பாடகர் ஆர்யன் தினேஷ் கனகரத்னம் உடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி இருக்கிறார். அதுமட்டுமல்ல, மென்ட்டல் மனதில் என்ற பாடலை மணிரத்னமும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து எழுதி இருக்கின்றனர்.


Post your comment





Related News
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
இயக்குனர் மணிரத்னத்துக்கு தற்கொலை மிரட்டல் ! ஊழியரால் பரபரப்பு
மற்ற ஊர்களை விடுங்க, சென்னையை மிரட்டிய காற்று வெளியிடை வசூல்
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா?
அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்
மணிரத்னம் எப்போதும் என்னை கட்டாயப்படுத்த மாட்டார்: ஏ.ஆர்.ரகுமான்
மணிரத்னத்தை கௌதம் மேனன் சந்தித்தது ஏன் தெரியுமா?
பட பிரச்சனையால் மணிரத்னம் மீது கோபமாக இருக்கும் பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions