மணிரத்னம், கௌதம்மேனன் படத்தில் நடிக்க ஆசை: அதர்வா

Bookmark and Share

மணிரத்னம், கௌதம்மேனன் படத்தில் நடிக்க ஆசை: அதர்வா

அதர்வா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘இரும்பு குதிரை’. இதில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். ஆக்‌ஷன் கதையோடு வெளிவந்த இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்குப் பிறகு சந்தோஷ் இயக்கத்தில் கேத்ரின் தெரேசாவுடன் இணைந்து ‘கணிதன்’ படத்திலும், ரவி அரசு இயக்கத்தில் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து ‘ஈட்டி’ படத்திலும் நடித்து வந்தார். இவ்விரு படங்களும் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.

மேலும் பாலா தயாரிப்பில் அதர்வா நடித்து வரும் ‘சண்டிவீரன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை சற்குணம் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்களில் முடியவுள்ளது. இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

இதன் பிறகு அதர்வாவுக்கு மணிரத்னம், கௌதம் மேனன் படங்களில் நடிக்க ஆசையிருக்கிறதாம். சமீபத்தில் அளித்த பேட்டியில், மணிரத்னத்தினத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தையும், கௌதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்தையும் பார்த்து வியந்ததாகவும், இவர்கள் படத்தில் நடிக்க ஆசை இருப்பதாகவும் கூறியிருக்கிறார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions