'மணிரத்னம் இஸ் பேக்', பிரபலங்கள் மகிழ்ச்சி

Bookmark and Share

'மணிரத்னம் இஸ் பேக்', பிரபலங்கள் மகிழ்ச்சி

கிரிக்கெட்டிலும், சினிமாவிலும் 'ஃபார்ம்'ல் இருப்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால் இரண்டு ரசிகர்களுமே அந்தப் பிரபலங்களை கிண்டலடித்தே நோக வைத்து விடுவார்கள்.

80களில் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அடையாளத்துடன் நுழைந்த மணிரத்னம் கடந்த சில வருடங்களாக இயக்கிய படங்கள் வெற்றி பெறவில்லை என்றதும் அவருடைய படைப்பைப் பற்றி பலரும் கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.

அதிலும் 'கடல்' படத்தைப் பார்த்ததும் மணிரத்னத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்தனர். அப்போதே சில பிரபலங்கள் மணிரத்னம் என்றுமே மணிரத்னம்தான் அவரை இப்படியா விமர்சிப்பது என்றெல்லாம் ஆதங்கப்பட்டார்கள்.

அதன் விளைவுதான் 'ஓ காதல் கண்மணி' படம் வெளிவருவதற்கு முன்பு 'மவுஸ் வைத்திருப்பவர்கள் எல்லாம் விமர்சிக்க வந்து விட்டார்கள்' என்று சுஹாசினி கொளுத்திப் போடவும் காரணமாக அமைந்தது.

படத்தைப் பார்த்த பின் சுஹாசினி சொன்னதை பலரும் மறந்து விட்டார்கள், அப்படியே ஞாபகத்தில் வைத்துள்ளவர்களும் அதைப் பற்றி பெரிதாக கமெண்ட் அடிக்கவில்லை.

இதனிடையே படத்தைப் பார்த்த ரசிகர்கள் 'மணிரத்னம் இஸ் பேக்', அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்டார் என்று படத்தைக் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். அவர்களோடு பல திரையுலகப் பிரபலங்களும் படத்தைப் பார்த்து மணிரத்னத்திற்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

சிலர் வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் பாராட்டி கமெண்ட் போட்டு வருகிறார்கள். மணிரத்னமும் படத்தின் வெற்றிக்கு நன்றி கூறி மீடியாக்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


Post your comment





Related News
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions