மணிரத்னம் பட அனுபவம் குறித்து பேசிய கார்த்தி!

Bookmark and Share

மணிரத்னம் பட அனுபவம் குறித்து பேசிய கார்த்தி!

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு அண்மையில் லடாக்கில் முடிவுக்கு வந்துள்ளது.

இதில் அதிபயங்கர ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய கார்த்தி, ” இது என் கேரியரில் மறக்கமுடியாத படம். இப்படம் எனக்கு பலவிதமான அனுபவங்களை கொடுத்துள்ளது.

20 நாட்கள் லடாக் பகுதியில் படமாக்கப்பட்ட காட்சிகள் புதுசாகவும் அதேசமயம் வித்தியாசமாகவும் வந்துள்ளது” என்றார்.மேலும் இப்படம் அடுத்த ஆண்டு சம்மரில் திரைக்குவரும் என சொல்லப்படுகிறது. கார்த்தி ஜோடியாக அதிதி ராவ் நடிக்கும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions