ஓ காதல் கண்மணி டிரைலருக்கு 3 நாட்களில் 15 லட்சம் ஹிட்ஸ்

Bookmark and Share

ஓ காதல் கண்மணி டிரைலருக்கு 3 நாட்களில் 15 லட்சம் ஹிட்ஸ்

'கடல்' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் 'ஓ காதல் கண்மணி'. மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகி.

ஏ.ஆர். ரஹ்மானின் இசை, பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உருவாகிவரும் ஓ காதல் கண்மணி படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் யூடியூபில் வெளியானது. 1 நிமிடம், 22 வினாடிகள் ஓடும் இந்த டிரைலரில் மணிரத்னத்திற்கே உரிய டச் தெரிகிறது. ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையும், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் மிரட்டலாக உள்ளன.

துல்கர் சல்மானின் நடிப்பும் ரசிக்கும்படி உள்ளதாக ரசிகர்களின் பாராட்டைப்பெற்றுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளி வந்தபோதே, பலராலும் பாராட்டப்பட்டது. அதோடு, டிரைலர் எப்போது வரும் என்ற ஆவலையும் உண்டாக்கியது. ஓ காதல் கண்மணி டிரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது மட்டுமல்ல, மீண்டும் ஒரு அலைபாயுதே படத்தைப் பார்ப்பதுபோல் இளமைத்துள்ளலுடன் இருந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.

மணிரத்னத்தின் கேரியரில் சமீபகாலமாக அவர் இயக்கிய படங்கள் எதுவும் வசூல்ரீதியாக வெற்றிபெறவில்லை. அதிலும் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த கடல் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களே அதிகம் கிடைத்தது.  

முந்தைய தோல்விகளை துடைத்துப்போட்டுவிட்டு மணிரத்னத்துக்கு மிகப்பெரிய வெற்றியை ஓ காதல் கண்மணி படம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. ஓ காதல் கண்மணி டிரைலர் வெளியாகி 3 நாட்களுக்குள் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதை பார்த்து ரசித்துள்ளது கூட அதற்கான அறிகுறிதான்.


Post your comment





Related News
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions