ஓ காதல் கண்மணியின் சாதனை

Bookmark and Share

ஓ காதல் கண்மணியின் சாதனை

எத்தனை புதிய இயக்குநர்கள் வந்தால் என்ன? மணிரத்னத்துக்கு மக்கள் கொடுத்த இடத்தை யாரும் தொடவே முடியாது. அவர் இயக்கிய சில படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றியடையவில்லை என்றாலும், ரசிகர்களுக்கு அவர் மீதான எதிர்பார்ப்பு இம்மியளவும் குறையவில்லை.

வரும் வாரம் அதாவது 17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது - மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி'. இந்தப் படத்தின் டிரைலர் சத்தமில்லாமல் மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது.  ஷங்கர்- விக்ரம், ஷங்கர் - ரஜினி, அஜித் - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான படங்களுக்குப் பிறகு அந்த சாதனை செய்த ஒரே தமிழ்ப்படம் 'ஓ காதல் கண்மணி' படம் மட்டுமே.

அப்படி என்ன சாதனை படைத்திருக்கிறது? மார்ச் 1ஆம் தேதி 'ஓ காதல் கண்மணி' யின் டிரைலர் யு டியூப்பில் வெளியிடப்பட்ட போது, வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே அந்த டிரைலருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஒரு சில நாட்களிலேயே 20 லட்சம் பார்வைகள் இந்த டிரைலரைப் பார்த்து ரசித்தனர். இப்போது இந்த டிரைலர் வெளியாகி 40 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த டிரைலரை கண்டுகளித்துள்ளனர்.

கோச்சடையான், ஐ, லிங்கா, என்னை அறிந்தால் படங்களுக்குப் பிறகு 40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த ஒரே தமிழ்ப்படம் 'ஓ காதல் கண்மணி' மட்டுமே. கோச்சடையான், ஐ, லிங்கா, என்னை அறிந்தால் படங்களில் பிரபல கதாநாயகர்கள் நடித்திருந்ததே அந்த சாதனைக்கு காரணம்.

மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' யின் நாயகள் துல்கர் சல்மான், நாயகி நித்யா மேனன் இருவருமே தமிழ்நாட்டில் அவ்வளவு பிரபலமானவர்கள் இல்லை. அப்படி இருந்தும் 'ஓ காதல் கண்மணி' டிரைலர் சாதனை படைத்திருக்கிறது என்றார்ல மணிரத்னம்தானே காரணமாக இருக்க முடியும்?.


Post your comment





Related News
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions