ஓ காதல் கண்மணி திருமணத்துக்கு எதிரான சர்ச்சை படமா?: மணிரத்னம் பேட்டி

Bookmark and Share

ஓ காதல் கண்மணி திருமணத்துக்கு எதிரான சர்ச்சை படமா?: மணிரத்னம் பேட்டி

மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படம் வருகிற 17–ந் தேதி ரிலீசாகிறது. ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ இப்படத்தை தயாரித்து உள்ளது. இதில் நாயகனாக மம்முட்டி மகன் துல்கர் சல்மான், நாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.இதையடுத்து பாடல் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டது.

இதில் கவிஞர் வைரமுத்து பங்கேற்று பேசும்போது, மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ கலாச்சார அதிர்ச்சியை உருவாக்குகிற படம். மேல்நாட்டு தாக்கத்தால் கலாசாரங்கள் மாறுகின்றன. வரும் காலத்தில் திருமண முறை இருக்குமா என்ற சந்கேங்கள் எழுந்துள்ளது. அந்த வகையில் பரிசோதனை முயற்சியாக இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

23 ஆண்டுகளாக மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து கூட்டணிக்கு தொடர்கிறது. இந்த படத்தில் ஒரு பாடலை மட்டும் நான் ஊரில் இல்லாத காரணத்தால் மணிரத்னமும், ஏ.ஆர்.ரகுமானும் சேர்ந்து எழுதி விட்டனர் என்று பேசினார்.

பின்னர் மணிரத்னத்திடம் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழக்கூடியதுதான் இந்த படத்தின் கதையா? என்று கேட்டபோது, படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். என் மொழி சினிமா படத்தில்தான் கதையை கூறுவேன். வேண்டுமென்றே எதையும் திணிக்க மாட்டேன் என்று பதில் அளித்தார். 


Post your comment





Related News
மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோ இவரா?
ஓகே கண்மணி ஹிந்தி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
வேகமாக நடக்கும் ஓகே கண்மணி ஹிந்தி படப்பிடிப்பு!
ஓகே கண்மணி ஹிந்தி பர்ஸ்ட் லுக் வெளியானது!
மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது ஓ காதல் கண்மணி!
ஹிந்தியில் ஓ காதல் கண்மணி
ஓ காதல் கண்மணி ரீமேக்கில் சோனாக்ஷி
50வது நாளில் இரண்டு படங்கள்...!
நித்யா மேனனுக்கு நான்கு வெற்றி...!
\'ஓகே கண்மணி\' வெற்றியைக் கொண்டாடிய ஏ.ஆர்.ரகுமான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions