தமிழில் மீண்டும் மனீஷா கொய்ராலா

Bookmark and Share

தமிழில் மீண்டும் மனீஷா கொய்ராலா

மணிரத்தனம் இயக்கிய பம்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இந்தி நடிகை மனீஷா கொய்ராலா. இந்தியில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மனீஷா, தமிழில் இந்தியன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2011ம் ஆண்டு மாப்பிள்ளை படத்தில் நடித்தார்.

அதன் பிறகு புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மனீஷா, சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது புற்றுநோயிலிருந்து மீண்டு தன் சினிமா கேரியரை மீண்டும் துவக்கி இருக்கிறார்.

இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்ட மனீஷா, தமிழில் தயாராகும் ஒரு மெல்லிய கோடு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். குப்பி, வனயுத்தம் படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் இந்தப் படத்தில் அர்ஜூன், ஷாம், ஆஷாபட் ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார்.

சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். "பல மரணங்களுக்கு தீர்வே இல்லாமல், கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. அப்படிப்பட்ட மரணங்களை தோண்டி எடுத்து காரணத்தை கண்டுபிடிக்கும் ஒரு நிபுணரின் கதை இது.

நாட்டில் இன்னும் விடுவிக்கப்படாத பல புதிரான கொலைகள் பற்றி ஆராய்கிறது படம். இதில் மனீஷா கொய்ராலா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இங்கு நிறைய நடிகைகள் இருக்கும்போது அவரை அழைத்து வந்து நடிக்க வைப்பதற்கான பலமான காரணம் படத்தில் இருக்கிறது" என்றார் இயக்குனர் ரமேஷ்.


Post your comment





Related News
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
என் திருமண முறிவுக்கு நான் தான் காரணம்: மனிஷா கொய்ராலா
2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா
பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்
கேன்சருக்கு பிறகு மனிஷா கொய்ரலா எடுத்த அதிரடி முடிவு
சொப்பண சுந்தரி மனிஷா யாதவின் 7 வருட காதல்
ரஜினி, கமலுடன் நடித்து உச்சத்தில் இருந்தபோது சிகரெட்டால் கேன்சரில் பாதிக்கப்பட்ட நடிகை!
‘சொப்பன சுந்திரி’ மனிஷா யாதவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
இந்த வருடம் இறுதியில் 2-வது திருமணம்: மனிஷா கொய்ராலா
பட வாய்ப்பு வராததால் ஷோரூம் தொடங்கிய மனிஷா யாதவ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions