பிணமாக நடிக்கும் மனீஷா கொய்ராலா

Bookmark and Share

பிணமாக நடிக்கும் மனீஷா கொய்ராலா

குப்பி, வனயுத்தம் படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் தற்போது தமிழ், கன்னடத்தில் இயக்கும் படம் ஒரு மெல்லிய கோடு. கன்னடத்தில் கேம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இது யாராலும் கண்டுபிடிக்க முடியாத கொடூர கொலைகளை கண்டுபிடிக்கும் தடயவியல் நிபுணரின் கதை. அந்த நிபுணராக அர்ஜூன் நடிக்கிறார். ஷாம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்தியாவின் ஒரு வி.வி.ஐ.பி கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை கண்டுபிடிக்கவே முடியவில்லை. கொலைக்கான காரணமும் தெரியவில்லை. அதை அர்ஜுன் கண்டுபிடிப்பது கதை.

கொலையான அந்த வி.வி.ஐ.பி ஒரு கோடீஸ்வர தொழிலதிபர். அந்த கேரக்டரில் மனீஷா கொய்ராலா நடிக்கிறார். படத்தில் அவர் கோடீஸ்வரியாக ஒரு சில காட்சிகளில்தான் வருவார்.

அதன் பிறகு அவர் பிணமாகத்தான் நடிக்கிறார். அந்த பிணத்தை பல கோணங்களில் ஆராய்ந்து அர்ஜுன் கொலையாளிகளை கண்டுபிடிப்பார். பூந்தமல்லி அருகே உள்ள ஒரு தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தடயவியல் பரிசோதனை லேப் செட்டில் ஒருவாரமாக மனீஷா பிணமாக நடித்துள்ளார். அவர் தொழிலதிபராக உலாவரும் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட இருக்கிறது.

 


Post your comment





Related News
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
என் திருமண முறிவுக்கு நான் தான் காரணம்: மனிஷா கொய்ராலா
2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா
பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்
கேன்சருக்கு பிறகு மனிஷா கொய்ரலா எடுத்த அதிரடி முடிவு
சொப்பண சுந்தரி மனிஷா யாதவின் 7 வருட காதல்
ரஜினி, கமலுடன் நடித்து உச்சத்தில் இருந்தபோது சிகரெட்டால் கேன்சரில் பாதிக்கப்பட்ட நடிகை!
‘சொப்பன சுந்திரி’ மனிஷா யாதவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
இந்த வருடம் இறுதியில் 2-வது திருமணம்: மனிஷா கொய்ராலா
பட வாய்ப்பு வராததால் ஷோரூம் தொடங்கிய மனிஷா யாதவ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions