மனிஷாவின் மனமாற்றம்

Bookmark and Share

மனிஷாவின் மனமாற்றம்

நடிகைகளின் பாதையை அவர்கள் நடிக்கும் படங்களின் ரிசல்ட்தான் தீர்மானிக்கிறது. வழக்கு எண் 18/9 படத்தில் மாடர்னான பள்ளி மாணவியாக அறிமுகமானவர் மனீஷா யாதவ். அந்தப் படத்தில் அவருக்கு நல்லபெயர் கிடைத்தது.

அதன் பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த  ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கௌப்பணும் பாண்டியா ஆகிய படங்கள் வெற்றிப்படமாக அமையவில்லை. விஜய்சேதுபதி உடன் நடிக்க ஒப்பந்தமான இடம்பொருள் ஏவல் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

எனவே வெறுத்துப்போன மனிஷா யாதவ்  தற்போது ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடித்திருக்கும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் படுகவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். லிப் லாக் உட்பட எல்லா விஷயங்களுக்கும் இப்படத்தில் டபுள் ஓகே சொன்ன மனீஷா, இப்போது நடன இயக்குனர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் ஒரு குப்ப கதை படத்தில் வேறு பாணியில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் கவர்ச்சிக்கு குட்பை சொல்லிவிட்டு வித்தியாசமான வேடத்தில்  நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் மனீஷா யாதவ்விற்கு சேரிப் பெண் வேடமாம்.  இப்படத்தின் கேரக்டருக்கு தனக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஒரு குப்ப கதை யின் நாயகி.


Post your comment





Related News
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
என் திருமண முறிவுக்கு நான் தான் காரணம்: மனிஷா கொய்ராலா
2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா
பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்
கேன்சருக்கு பிறகு மனிஷா கொய்ரலா எடுத்த அதிரடி முடிவு
சொப்பண சுந்தரி மனிஷா யாதவின் 7 வருட காதல்
நாய்கள் கடியால் பாதிக்கப்பட்ட நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
நாய்கள் கடியால் மோசமான நிலையில் பிரபல நாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions