பட வாய்ப்பு வராததால் ஷோரூம் தொடங்கிய மனிஷா யாதவ்!

Bookmark and Share

பட வாய்ப்பு வராததால் ஷோரூம் தொடங்கிய மனிஷா யாதவ்!

தமிழில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான நடிகை மனிஷா யாதவ், தற்போது பெங்களூருவில் டிசைனிங் ஷோரூம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

வழக்கு எண் 18/9 படத்திற்கு பின் ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை மனிஷா யாதவ். எனினும், வரிசையாக வெளிவந்த எந்த படமுமே அவர் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறாததால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்,

பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் மீண்டும் தனக்கொரு நிரந்தர இடம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்தார் மனிஷா.
ஆனால், அப்படம் வியாபார ரீதியாக மட்டுமே வெற்றியை தேடி தந்துள்ளது. மற்றபடி அவருடைய இமேஜையே டேமேஜ் செய்துவிட்டது அப்படம்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம் என்று ஆசையுடன் இருந்த மனிஷாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் வராதது வருத்தத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சினிமாவை விட்டு விலகி விடலாம் என்று முடிவு செய்துள்ள மனிஷா பெங்களூரில் பெண்களுக்கான ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வடிவமைக்கும் டிசைனிங் ஷோரூம் ஒன்றை தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Post your comment





Related News
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
என் திருமண முறிவுக்கு நான் தான் காரணம்: மனிஷா கொய்ராலா
2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா
பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்
கேன்சருக்கு பிறகு மனிஷா கொய்ரலா எடுத்த அதிரடி முடிவு
சொப்பண சுந்தரி மனிஷா யாதவின் 7 வருட காதல்
நாய்கள் கடியால் பாதிக்கப்பட்ட நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
நாய்கள் கடியால் மோசமான நிலையில் பிரபல நாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions