உதயநிதியின் மனிதன் படத்துக்கு வரிச்சலுகை மறுப்பு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

Bookmark and Share

உதயநிதியின் மனிதன் படத்துக்கு வரிச்சலுகை மறுப்பு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கெத்து’ என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. ‘கெத்து’ என்பது தமிழ் சொல் அல்ல என்று கூறி இந்த படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்தது.

இதை எதிர்த்து அந்த படத்தை தயாரித்த ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, ‘கெத்து’ என்பது தமிழ் வார்த்தைத்தான் என்று கூறி தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கு ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் முன்பு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘மனிதன்’ என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த படத்துக்கும் கேளிக்கை வரி விலக்கு கேட்டு, அப்படத்தை தயாரித்த ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம், தமிழக அரசிடம் விண்ணப்பித்தது.

இதையடுத்து, இந்த படத்தை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய 5 நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவை சேர்ந்தவர்கள், படத்தை பார்த்து விட்டு, மனிதன் என்பது தமிழ் சொல் அல்ல. ‘மாந்தன்’, ‘மாந்தர்’ என்பதுதான் தமிழ் சொல் என்று கூறி அறிக்கை கொடுத்துள்ளனர்.

இந்த அறிக்கையின் அடிப்படையில், மனிதன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்து தமிழக அரசு கடந்த ஏப்ரல் 29-ந் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையை எதிர்த்து ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:-

மனிதன் படத்தை பார்த்த குழுவில் உள்ளவர்களுக்கு, தமிழ் மொழி குறித்து போதிய ஞானம் இல்லை. அதனால், மனிதன் என்ற வார்த்தை தமிழ் இல்லை என்று கூறி அறிக்கை கொடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையை எந்திரத்தனமாக பரிசீலனை செய்து, கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்து தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை முதன்மை செயலர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

ஆனால், ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த ‘மனிதன்’, ‘உயர்ந்தமனிதன்’ போன்ற படங்களுக்கு தமிழக அரசு கடந்த 2007-ம் ஆண்டு கேளிக்கை வரி விலக்கு அளித்துள்ளது.

ஒரு விஷயத்தில் 2 நிலைபாடுகளை எடுக்க முடியாது. தமிழக அரசு அதிகாரிகள் உள்நோக்கத்துடன், எங்களுடைய படத்துக்கு வரி சலுகை வழங்க மறுக்கின்றனர். எனவே, வரி சலுகை மறுத்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions