தனியார் பஸ்ஸில் மீண்டும் திருட்டு டிவிடி: மனிதன் படம் சிக்கியது

Bookmark and Share

தனியார் பஸ்ஸில் மீண்டும் திருட்டு டிவிடி: மனிதன் படம் சிக்கியது

நேற்று இரவு அவினாசியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் புத்தம் புது திரைப்படமான ‘மனிதன்’  திரைப்படம் ஒளிபரப்புவதை பயணி ஒருவர் நடிகர் சங்க பொது செயலாளர் விஷாலுக்கு தெரியப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரின் புகாரின் அடிப்படையில் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமன் மேற்பார்வையில் வீடியோ பைரஸி காவல் கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி உத்தரவின்படி, காவல்துறை ஆய்வாளர்கள் மகேந்திரன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் இன்று காலை மதுரவாயலுக்கு விரைந்து சென்று பஸ்ஸை மடக்கி பிடித்து அயனாவரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகர் சங்கத்திற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் தனியார் பஸ்ஸில் புதிய படம் ஒளிபரப்புவதை பிடிக்கபடுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த வாரம் ‘தெறி’ படம் ஒளிபரப்பியது பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions